தேசிய குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார்
ஷ்யாம் நியூஸ்
09.09.2022
தேசிய குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார்.
தேசிய குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டூவிபுத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடல் புழு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு மாத்திரை வழங்கி தொடங்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ ,சுகாதார இணை இயக்குனர் பொற்செல்வன் ,மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா ,மாநகர் நலன் அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன் ,,அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், வட்டப் பிரதிநிதி குமார் ,போல்பேட்டை பகுதி பிரதிநிதியும் மேயரின் நேர்முக உதவியாளருமான பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ,பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.