தூத்துக்குடியில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் ,மேயர் ஜெகன் பெரியசாமி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஷ்யாம் நியூஸ்
17.09.2022
தூத்துக்குடியில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் ,மேயர் ஜெகன் பெரியசாமி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இன்று தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது பெரியாரின் பிறந்த நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமூக நீதி நாளாக அறிவித்தார் அன்று முதல் பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது பெரியாரின் பிறந்த நாளான இன்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் கீதா ஜீவன் ,மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மற்றும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பு சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் மாநகர் திமுக வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து திமுக சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.