ஷ்யாம் நியூஸ்
28.09.2022
தூத்துக்குடியில் தூய்மை பணி வாகனம் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினசரி எல்லா பகுதிகளிலும் பொதுமக்கள் பயன்;படுத்திய தேவையற்ற கழிவுகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் சுகாதாரத்தை முழுமையாக அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்ற அடிப்படையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை தேவையற்ற நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது அதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது. பொதுமக்களுக்கும் குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். அனைத்து பகுதிகளுக்கும் தூய்மை பணிகளுக்கான வாகனம் சரியான நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முனியசாமிபுரம் பகுதிகளில் தூய்மை பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனம் சரியான நேரத்திற்கு அப்பகுதிக்கு செல்கிறதா? என்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகனத்தை ஆய்வு மேற்கொண்டு ஓட்டுநரிடம் அதற்கான வாகனநேர அட்டவணையை வாங்கி பார்த்து நல்ல முறையில் பணியாற்ற வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார்.