ஷ்யாம் நியூஸ்
22.09.2022
தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று(21.09.2022) மாலை தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவராக காதர் மைதீன்( கலைஞர் டிவி) செயலாளராக அண்ணாத்துரை (குமுதம் ரிப்போர்ட்டர்) பொருளாளராக மாரிமுத்துராஜ்( மாலை முரசு )துணைத் தலைவராக லட்சுமணன்( தூர்தர்ஷன்) இணைச் செயலாளராக கார்த்திகேயன்(ஜூனியர் விகடன்) ஆகியோர் போட்டியின்றி மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற கௌரவ ஆலோசகர் அருண் (ஜெயா டிவி )பதவி பிரமாணம் செய்து வைத்தார் மன்ற கெளரவ ஆலோசகர் வசீகரன், மூத்த உறுப்பினர் பாஞ்சை கோபால்சாமி உட்பட மன்ற உறுப்பினர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் . புதிதாக பிரஸ் கிளப் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட காதர் மைதீன் ஏற்புரையாற்றினார் மன்ற செயலாளர் அண்ணாதுரை நன்றியுரையாற்றினார்.