ஷ்யாம் நியூஸ்
29.09.2022
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில் மாநகராட்சி நகராட்சியாக இருந்து 5.8.2008 முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது அருகிலுள்ள தூத்துக்குடி ரூரல் சங்கரபேரி மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய 5 பஞ்சாயத்துகள்; பகுதி சேர்த்து 60 வார்டுகள் உள்ளடக்கியதாகும், மாநகராட்சிக்கான அடிப்படை பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் அரசிடமிருந்து அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மாநகராட்சி பொதுசுகாதாரம் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள போதிய நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை படி அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களை தனியார் மூலமாக மாமன்ற அனுமதியுடன் ஓப்பந்தபுள்ளி பெற்று நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதற்கு நகராட்சி நிர்வாக ஆணையரிடம் அனுமதி ஏதும் பெற தேவையில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் அனுமதிக்கப்பட்ட பணியிடம் மற்றும் இதர பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் நகர்புற வாழ்வாதார மையம் மூலம் மாவட்ட கலெக்டர் அனுமதிக்கப்பட்ட தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேற்படி பணியிடங்களுக்கான நிர்ணயம் செய்யப்படும் தினக்கூலி விலை வீகிதப்பட்டியல்படி மேற்படி அனைத்து தற்காலிக தினக்கூலி பணியாளர்களுக்கு 26.8.2022 முதல் 25.3.2023 வரையிலான காலத்திற்கு பணியமர்த்திக்கொள்ள அனுமதிக்கவும் மேலும் அதற்குரிய உத்தேச செலவினம் 10.50 கோடி அனுமதி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனுமதியற்ற கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறுதலாக கட்டிவரும் கட்டிடங்கள் மீது உரிய அறிவிப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும் வார்டுகளில் அவ்வப்போது ஏற்படும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அறிவிப்பு வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளவும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் இளநிலை உதவி பொறியாளர்களுக்கு நகரஅமைப்பு உதவியாக தொழில்நுட்ப உதவியாளர்கள் மாவட்ட கலெக்டர் அவர்களின் தினக்கூலி அடிப்படையில் நகர்புற வாழ்வாதார மையம் மூலம் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு பணிபுர்pந்து வருகிறார்கள். தற்போது கலெக்டரால் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணியமர்த்தப்பட்ட தினக்கூலி 5 பணியாளர்களுக்கு 2022, 2023 ஆண்டிற்கான திருத்திய ஊதிய பட்டியலின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யவும் அதற்கான கூடுதல் உத்தேச செலவினம் 7லட்சம் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்;, திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் தனசிங், காந்திமதி, சேகர், நகர்நல அலுவலர் அருண்குமார், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராமர், கண்ணன், ஜாக்குலின்ஜெயா, வைதேகி, முத்துவேல், தனலட்சுமி, பவானி மார்ஷல், மெட்டில்டா, மரியகீதா, சரண்யா, தெய்வேந்திரன், கந்தசாமி, சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, ரெங்கசாமி, மும்தாஜ், முத்துமாரி, ஜான், ஜாண்;சிராணி, ராமுத்தம்மாள், அதிர்ஷ்டமணி, கனகராஜ், பேபிஏஞ்சலின், சந்திரபோஸ், கற்பககனி, நாகேஸ்வரி, ஜெயசீலி, எடின்டா, பொன்னப்பன், சரண்யா, சோமசுந்தரி, அதிமுக கவுன்சிலர்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, வீரபாகு, விஜயலட்சுமி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.