தூத்துக்குடி டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை பணிக்கு வரச் சொல்லுங்கள் தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளருக்கு கோரிக்கை!
தூத்துக்குடி டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை பணிக்கு வரச் சொல்லுங்கள் தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளருக்கு கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் 155 க்கு மேற்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படுகின்றன இக்கடையில் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் உதவி விற்பனையாளர்கள் என தலா ஒரு கடைக்கு நான்கு ஐந்து நபர்கள் பணி புரிகின்றனர். தூத்துக்குடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் தினமும் தான் பணி நியமிக்கப்பட்ட கடைகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக எழுந்து வருகிறது. ஒரு சில விற்பனையாளர்கள் மேற்பார்வையாளரின் மிரட்டலுக்கு பயந்து மாவட்ட மேலாளர் இடம் தங்கள் குறையை சொல்ல சந்தர்ப்பம் கிடைக்காமலும் பயத்திலும் மேற்பார்வையாளர்களின் பணிகளை செய்து சேவகம் செய்து வருகின்றனர். இதனால் மேற்பார்வையாளர்கள் 75 சதவீதம் கடை பக்கம் வருவதில்லை மாவட்ட மேலாளர் கடை பக்கம் வருவதாக அறிந்தால் மட்டுமே தாங்கள் கடையில் பணிபுரிவது போல் நாடகம் நாடி முதலில் வந்து நிற்கிறார்கள் .இதற்கு டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மாதம் மாதம் கப்பம் வாங்குவதால் மேலாளரின் அதிரடி நடவடிக்கையை முன்னதாகவே மேற்பார்வையாளர்களுக்கு தகவலை தெரிவித்து விடுகின்றனர். அரசுக்கு விற்பனை தொகையை செலுத்த வேண்டிய மேற்பார்வையாளர் செய்ய வேண்டிய பணியையும் விற்பனையாளர்களை மேற்கொள்கின்றனர் இரவு கடையை அடைக்க வருவதும் இல்லை அடுத்த பின் சாவியை கொண்டு சொல்வதும் இல்லை .நண்பகல் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடைக்கு சாவியை கொண்டு வந்து கொடுப்பதும் இல்லை இவை அத்தனை வேலையும் விற்பனையாளர்களை செய்கின்றனர் கடைகளில் எந்த பணியும் செய்யாத மேற்பார்வையாள்களை மாவட்ட மேலாளரிடம் முறையாக தெரிவிக்க முடியாமல் விற்பனையாளர்கள் தவிக்கின்றனர் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட மேலாளர் ஒவ்வொரு கடையிலும் விற்பனையாளர்களிடம் கடையின் மேற்பார்வையில் வருகை, கடை சாவியை யார் கொண்டு செல்கிறார் பணம் யார் கட்டுகிறார் என்ற விவரங்களை மாவட்ட மேலாளர் விற்பனையாளர்களிடம் அல்லது உதவி விற்பனையாளர்களிடம் மேற்பார்வையாளர்களுக்கு தெரியாமல் விபரத்தினை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.