ஷ்யாம் நியூஸ்
10.09.2022
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மணல்திட்டு அகற்றும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாளில் இருந்து மாநகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளை நேரடியாக ஆய்வு செய்து பணியை விரைப்படுத்தி வருகிறார். குறிப்பாக பருவ மழையை முன்னிட்டு வடிகால் அமைக்கும் பணியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகள் மற்றும் ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை மாதம் 2; மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் ‘மாஸ் கிளினிங்’ பணிகளும் நடைபெறுகிறது. பேருந்து நிறுத்துமிடங்களில் தேவையற்ற வால்போஸ்டர் மற்றும் சிறுமுட்புதர்களை அகற்றுவது. சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவது போன்ற பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் தூய்மைப் பணிகளை அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் நலன் கருதியும், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும் சாலைகளின் இருபுறமும் உள்ள மணல் திட்டுக்களை முழுமையாக அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, தூத்துக்குடி பிரதான சாலையான 3வது மைல் மேம்பாலத்தில் துவங்கி தமிழ்சாலை, வ.உ.சி.சாலை வழியாக சப்கலெக்டர் அலுவலகம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றும் பணி நேற்றிரவு 9 மணி முதல் அதிகாலை வரை நடைபெற்றது. இதில் 8;0க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஜேசிபி உள்பட 10 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
நேற்றிவு 9 மணியளவில் 3வது மைல் மேம்பாலத்தில் இருந்து தூய்மைப்பணிகளை சுமார் 6 கி.மீ தூரம் வரை இந்த தூய்மைப் பணிகள் அதிகாலை வரை நடைபெற்றது. தூத்துக்குடி பிரதான சாலையில் மணல் திட்டுக்கள் அகற்றப்படுவதால் பல்வேறு விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்பதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் சாருஸ்ரீ-க்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர்கள், மேற்கு ஸ்டாலின் பாக்கியநாதன், கிழக்கு ராஜசேகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், திமுக வட்டப்பிரதிநிதி ஐயப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.