ஷ்யாம் நியூஸ்
14.09.2022
மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சண்முகக்கனி, கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோபால், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு சோட்டையன் தோப்பு விடுதலை சிறுத்தை கட்சி முகாம் செயலாளர் ரஞ்சித்குமார், வழக்கறிஞர் பிரிவு அர்ஜுன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவரும் எம்.பியுமான தொல் திருமாவளவன் படிப்பகத்தை திறந்து வைத்து வருகை பதிப்வேட்டில் கையெழுத்திட்டு புத்தர் சிலையை திறந்து வைத்து பேசுகையில் இந்த பகுதியில் இப்படி ஓரு படிப்பகம் அமைவதற்கு காரணமாக இருந்த நிர்வாகிகளை முதலில் பாராட்டுகிறேன். ஓவ்வொரு ஊரிலும் இது போன்ற படிப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்று எனது 60வது பிறந்தநாள் விழாவில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் முதன் முதலில் வடக்கு சோட்டையன் தோப்பில் தான் அதை நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள்.
இதற்கு உருவாக்கம் கொடுத்த தலைவர் ரவி, செயலாளர் வக்கீல் சார்லஸ், பொருளாளர் செல்வகுமார், துணைத்தலைவர் தங்கம், மற்றும் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்த பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், உள்ளிட்டவர்களை மனதார பாராட்டுகிறேன். கல்வி உள்பட அனைத்திலும் நாம் முன்னேற வேண்டும். இதற்கு முன்னோட்டமாக அம்பேத்கர் கல்வி இலக்கியம் அறிவியல் அரசியல் என அனைத்திலும் சாதனை படைத்தார். அவரது படிப்புக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள பலர் உதவி செய்ததால் அமெரிக்கா லண்டன், சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.
ஓடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக விளங்கியவரின் வழியில் நாம் பயணித்து வருகிறோம். வருங்கால நமது சந்ததியினர் நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும் அதற்கு ஊர் தோறும் இது போன்ற படிப்பகம் அமைக்க வேண்டும் என்று பேசினார். பின்னர் ஓரு குடும்ப தலைவின் பெண் குழந்தைக்கு அறிவுமதி என்று பெயர் சூட்டினார்.
முன்னதாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவரும் திமுக கிழக்கு பகுதி ஓன்றிய செயலாளருமான சரவணக்குமார் தலைமையில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைசெயலாளர் கணேசன், ஒன்றிய துணைச்செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான வசந்தகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், திமுக நிர்வாகிகள் மாரியப்பன், பால ஆனந்த், கௌதம், மைக்கேல் ராஜ், ஆகியோர் ரோஜாப்பூ மாலை அணிவித்து வரவேற்றனர்.
விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தென்மண்டல செயலாளர் தமிழினியன், மத்திய மாவட்ட செயலாளர் அகம்மது இக்பால், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு சோட்டையன் தோப்பு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.