ஷ்யாம் நியூஸ்
27.09.2022
தூத்துக்குடி மாநகர பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மழைகாலத்திற்குள் முடித்து மக்களின் பாதுகாப்பு போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநகர பகுதிகளில் நெருக்கடிகள் இல்லாமல் வாகனங்கள் சென்று வருவதற்கு பல்வேறு பகுதிகளில் தேவையற்ற மற்றும் சிறிய பெரிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய போக்குவரத்து சாலைகளையும் மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியுள்ளது. குறுகலான சாலைகள் பல பகுதிகளில் விரிவான சாலைகளாக மாறியுள்ளது. சாலைகளில் தேவையற்ற மணல் திட்டுகள் சிறிய பெரிய முட்புதர்கள் செடிகள் குப்பைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்காணிப்பில் ஊழியர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அவ்வப்போது மாநகராட்;சி பகுதியில் நடைபெறும் பணிகளை எந்த நேரம் என்று பார்க்காமல் ஆய்வுகளை மேயர் ஜெகன் பெரியசாமி செய்து வருகிறார். இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் செல்லும் சாலையில் தற்போது நடைபெற்று வரும் மணல் திட்டுகள் அகற்றும் பணிகளையும் கடற்கரை சாலையில் நடைபெறும் வடிகால் கட்டுமான பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்ககொண்டு தரமான முறையில் புதிய பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.