ஷ்யாம் நீயூஸ் 30.12.2023 வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக மட்டுமே களத்தில் நிற்கின்றன.முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அதிமுக சார்பாக அம்மா கிச்சன் ஆரம்பிக்கப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தல் படி தூத்துக்குடி டி ஏ கல்யாண மண்டபத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். மேலும் அவர் கூறுகையில் திமுகவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்காததால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 31, 1 ,2 தேதிகளில் கன மழை பெய் வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது இப்போதாவது மக்களை பாதுகாக்க தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க ...