தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
ஷ்யாம் நீயூஸ்
09.09.2023
தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது பிறந்த நாள்விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடாவுமான மந்திரமூர்த்தி மற்றும் தூத்துக்குடி
மாநகர மேற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், 35 வது வார்டு வட்ட செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப பிரிவினர், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
முன்னால் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனுக்கு மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.