தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் சாக்லேட் மாலை அணிவித்து கொண்டாடினர்..
ஷ்யாம் நியூஸ்
09.09.2023
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் சாக்லேட் மாலை அணிவித்து கொண்டாடினர்.
தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த கிராமமான பண்டாரவிளையில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய வங்கி தலைவர் சுதாகர், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள்,
தூத்துக்குடி 39வது வட்டக் கழக செயலாளர் திருச்சிற்றம்பலம், மற்றும் மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர்அணி இணை செயலாளர் டைகர் சிவா, அருணா பைனான்ஸ் பழனி குமார், திலகர் ஆகியோர் ஏற்ப்பாட்டில் 50 கிலோ எடை கொண்ட சாக்லேட்டால் தயாரிக்கப்பட்ட மாலையை முன்னால் அமைச்சர் எஸ் பி சண்முகநாதனுக்கு அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.