ஷ்யாம் நீயூஸ்
25.09.2023
நோட்டாவை ஓடவிட்ட எடப்பாடியார் தூத்துக்குடியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையின் மீது பேச்சு எல்லை மீறி செல்கிறது மறைந்த தலைவர் பற்றி இழிவாக பேசி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில் அதிமுக பாஜகவின் கூட்டணியை முடித்துக் கொள்கிறோம் என்று கூறினார் இது தங்கள் கருத்தா தங்கள் கட்சியின் கருத்தா என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இது என்னுடைய சொந்த கருத்து அல்ல என் கட்சியின் கருத்து என கூறியிருந்தார் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தை ஏளனம் செய்யும் வகையில் தூத்துக்குடி பாஜகவினர் தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி அருகே வெடி வெடித்து கொண்டாடினர் . மீண்டும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பெரியார் அண்ணா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை தவறாகவும் பேசி வந்தார் . இந்த நிலையில் அதிமுக மேலிடம் பாஜக தலைமையிடம் புகார் கொடுத்து வந்தனர். அண்ணாமலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால். இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த தலைவர்களை இழிவாக பேசிய அண்ணாமலை மீது பாஜக மேல் இடம் நடவடிக்கை எடுக்காததால் இனிமேல் பாஜகவுடன் அண்ணா திமுக கூட்டணி தொடராது என்று அதிரடி முடிவை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி சிவன் கோவில் அருகே ஜெயக்குமார் பாஜக கூட்டணி இல்லை என்று அறிவித்ததை பாஜகவினர் கொண்டாடிய அதே இடத்தில் இன்று தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆணைக்கினங்க அதிமுகவினர் வெடி வெடித்து இணைப்புகள் வழங்கி கொண்டாடினர். நோட்டாவை விரட்டி அடிக்கும் அண்ணா திமுக என்று கோஷமிட்டு தொண்டர்கள் உற்சாகமாக மிகுதியில் வெடி வெடித்து கொண்டாடினர்.