ஷ்யாம் நீயூஸ்
28.09.2023
TMB எம் டி ராஜினாமா! ஒன்பதாயிரம் கோடி பண பரிமாற்றம் காரணமா?
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் என்பவரின் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கணக்கு எண்ணிற்கு 9 ஆயிரம் கோடி பணம் கிரிடிட் வந்தது இது தமிழகம் முழுவதும் பேரும் பேசும் பொருளாக இருந்தது. இந்த நிலையில் வங்கியின் சார்பாக கொடுக்கப்பட்ட விளக்கத்தில் கணக்கு எண்ணிற்கு பதிலாக தொகையையும் தொகைக்கு பதிலாக கணக்கு எண்ணையும் பதிவிட்டதால் இந்த சம்பவம் நடந்து விட்டது என்று விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி எம்டி மற்றும் தலைமை நிர்வாகியுமான எஸ் கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துயுள்ளார் என்ற தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
அண்மையில் tmb bank கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவருக்கு 9000 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றதால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம் என தகவல் தெரிகிறது.