அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.
ஷ்யாம் நியூஸ்
09.09.2023
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தூத்துக்குடி மண்டல செயலாளர் கல்வி குமார் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா அண்ணா தொழிற்சங்க தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கு
பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போற்றியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து பிரிவு சார்பில் 30 கிலோ எடை கொண்ட பிறந்த நாள் கேக்கை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வெட்டி தனது பிறந்த நாளை போக்குவரத்து பிரிவு நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல இணைச் செயலாளர் V.லட்சுமணன் மண்டல துணைத் தலைவர் M. பார்வதி பொன் சிங் ஆதி ராஜ் வெள்ளையா முருகவேல் பீட்டர் பாலகுமார் சக்திவேல் முகைதீன் காதர் மாரியப்பன் பொன்ராஜ் மணிகண்டன் ஆறுமுக நைனார் உத்தரபாண்டி ஒளிமுத்து கருணாகரன் M.P. குமார் ராஜேஷ் சுந்தர பாண்டியன், மற்றும் தூத்துக்குடி நகர கிளை, தூத்துக்குடி புறநகர் கிளை, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஆகிய பணிமனை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.