வானம் வசப்படும் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாடல்
ஷ்யாம் நீயூஷ்
17.07.2023
வானம் வசப்படும் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாடல்
நான் முதல்வன் உயர்வுக்கு படி மற்றும் கல்வி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி வ உ சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என்று இருந்த நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டதால் அவரால் இந்நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இயலவில்லை அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார் அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாணவ மாணவிகள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் நல்லவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் மாணவ மாணவிகள் தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் கல்வியில் மாணவ மாணவியர்கள் முன்னேறுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன, வெற்றியடைய நிறைய கற்றுக் கொள்வதோடு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ,திறமையான மாணவர்களை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார், பெண்களுக்கென்று புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும், இரண்டாம் ஆண்டில் சேரும் மாணவிகளாக இருந்தாலும் இத்திட்டம் அவர்களுக்கு பொருந்தும், தற்போது தமிழகத்தில் ஐடி தொழிற்கல்வி 32 கோடியில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது வேம்பார், நாகலாபுரம், தூத்துக்குடி ஆகிய ஜடிகள் நவீனமயமான டெக்னாலஜி டாட்டா நிறுவனத்தின் பங்களிப்போடு பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் டாடா நிறுவனத்தில் வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது, கல்வியும் மருத்துவம் இரண்டு கண்கள் என்று முதல்வர் கூறியுள்ளார், நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும், தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் ,தன்னம்பிக்கையோடு செயல்படும் போது வானம் வசப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உரையாற்றினார். பின்பு மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் .இக்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், உதவி ஆட்சியர் பிரபு, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ,வ.உ.சி கல்லுரி முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.