அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை துறையின் மனுமீது நீதிமன்றம் இன்று முடிவெடுக்கவில்லை.
ஷ்யாம் நீயூஸ்
19.07.2023
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை துறையின் மனுமீது நீதிமன்றம் இன்று முடிவெடுக்கவில்லை.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவிற்கு தூத்துக்குடி நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
கடந்த 2006-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏப்.19-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், " சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கியுள்ளது. அத்துடன் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரணைக்கும் அமலாக்கத்துறை அழைத்திருந்தது.
இந்த நிலையில் தான், அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அமைச்சராக இருக்கிறார். இந்த வழக்கை நடத்தும் தமிழ்நாடு அரசு, அமைச்சர் ராதாகிருஷ்ணனை காப்பதில் தான் அக்கறை செலுத்துகிறது. எனவே, பிராசிகியூசன் முறையாக நேர்மையாக நடக்க வேண்டும். அதனால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்புக்கு உதவ விரும்புகிறோம். எனவே, இந்த வழக்கில் அமலாக்கத்துறையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று ஏப்.19-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு செய்தது.
இதற்குப் பிறகு சொத்துகுவிப்பு வழக்கு ஜூன் 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறையின் மனு மீது முடிவெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனால் அமலாக்கத் துறையின் மனு மீது தூத்துக்குடி நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த வழக்கை வரும் 2ம் தேதிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்தது.