ஷ்யாம் நீயூஸ்
07.07.2023
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்! போலீசார் கைது.
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து மேல் முறையீடு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளீதரன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் சார் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சாலை மாறியில் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம்,மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள்,மாநில அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன் மாமன்ற உறுப்பினர்கள் சந்திர போஸ் எடிந்தா கற்பக கனி மண்டல தலைவர்கள் ராஜன் சேகர் செந்தூர் பாண்டி மாவட்ட துணைத் தலைவர்கள் துணைத் தலைவர்கள் விஜயராஜ் ,பிரபாகரன் மார்க்கஸ் சின்ன காளை,சீனிவாசன், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர் மாவட்டச் செயலாளர்கள் கோபால் கந்தசாமி முனியசாமி அந்தோணி குரூஸ் கிருஷ்ணன்,வெங்கடசுப்பிரமணியன்,சாமுவேல் ஞானதுரை,ஐ என் டி யு சி மாநில அமைப்பு செயலாளர் சுடலை அமைப்பு சாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜான் சாமுவேல் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் வார்ட் தலைவர்கள் தனுஷ்,தாமஸ், மணி,கிருஷ்ணன்,உள்பட பலர் கலந்து கொண்டனர். 2 பெண்கள் உள்பட 31 பேர் கைதாகினர்.