ஷ்யாம் நீயூஸ்
18.07.2022
தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் இல்லாமல் ப்ரஸ் டூர்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1635 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று கொண்டிருக்கும் உயர்சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டுமானப்பணிகள் உட்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டமன்ற பேரவை குழு செயலாளர் தலைமையில் உறுப்பினர்கள் இன்று (18-07-2023) வருகைபுரிந்தனர். இதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ப்ரஸ் டூர் ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8.45 மணிவரை பெரும்பாலான செய்தியாளர்கள் வராத நிலையில் இரண்டு பேருடன் முதல் பாயின்ட்டான தூத்துக்குடி மருத்துவக்கல்லூரிக்கு பயணம் துவங்கியது. அந்த முதல் பாய்ன்டிலேயே ப்ரஸ் டூருக்கு அழைப்பையேற்று ஆதரவு அளித்த மேற்படி 2 செய்தியாளர்களையும் தவிக்கவிட்டு அடுத்த பாயின்டுக்கு புறப்பட்டுள்ளது செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனம். இதனால் மேற்படி செய்தியாளர்கள் இருவரும் வேறு வழியின்றி பைக்கில் லிப்ட் கேட்டு கலெக்டர் ஆபீஸ் சென்ற அவர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன் போன் மூலம் மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளனர்.