ஷ்யாம் நீயூஸ்
18.07.2023
அமலாக்கதுறையின் அடுத்த டார்கெட் முட்டையா? மீனா? சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி!
மேகதாது அணை பிரச்சனை கர்நாடகா அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் மக்களை வஞ்சிக்கிறது அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி பாஜக அலுவலகத்தில் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டுவதற்க்கு 9000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறிய காங்கிரஸுடன் சேர்ந்து தமிழக அரசும் மக்களுக்கு எதிராக வஞ்சனை செய்து வருகிறது, இந்த நிலையில் கர்நாடகாவிற்கு தமிழக முதல்வர் சென்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டது தமிழக மக்களுக்கு செய்யும் பெரிய துரோகம் என்றும் சசிகலா புஷ்பா கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்
சத்துணவில் அழுகிய முட்டை வழங்குகின்றனர், யார் தவறு செய்கிறார்களோ அங்கு அமலாக்கத்துறை ரைடு வரும் திமுகவின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் 1ஐ வெளியிட்டு விட்டார்
அடுத்து ஊழல் பட்டியல் இரண்டை வெளியிட உள்ளார்
மூன்றாவது ஊழல் பட்டியலில் நமது மாவட்ட (தூத்துக்குடி )அமைச்சர்கள் கூட இருக்கலாம். எம்பி கூட இருக்கலாம்.
திமுக செய்யும் ஊழலை அமலாக்கத்துறை பார்த்துக்கொண்டே இருப்பார்களா?
உயர்கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை
சத்துணவு துறையில் ஊழலே நடக்கவில்லையா? மத்திய அரசு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா?
கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொல்லி கருப்பு பணத்தை ஒழித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மோடியின் அரசு
உலக அளவில் தமிழ்நாட்டில் உள்ள கருப்பு பண முதலைகளாக இருப்பவர்கள் திமுகவினர்.
எந்தெந்த துறைகளில் ஊழல் நடக்கிறது என்பது பொது மக்களுக்கு தெரிகிறது
சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்படுகிறது. சத்துணவில் காசு வாங்குகின்றனர் என்பது மக்களுக்கே தெரியும்
யார் தவறு செய்கிறார்களோ அங்கு அமலாக்கத்துறை ரைடு வரத்தான் செய்யும். அவர்கள் அவர்களது கடமையை செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறையின் கரூர், விழுப்புரம், ரைடை தொடர்ந்து மூன்றாவதாக தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.