ஷ்யாம் நீயூஸ்
16.10.2023
தமிழகத்தில் மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம் ரத்து செய்ய வேண்டும்? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!
தமிழகத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை “கலைஞர் மகளிர் திட்டம்” மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் “பொருளாதார நிலை பலவீனமாக இருப்பதால் குடும்ப தலைவிகளின் உரிமை தொகை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனுதாக்கள் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.