ஷ்யாம் நீயூஸ்
20.10.2023
ஓய்வு பெற்ற தலையாரி கட்டுப்பாட்டில் தூத்துக்குடி தாலுகா அலுவலகம்!
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமம் கோரம்பள்ளம் 1. இக்கிராம அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றியவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வா பெற்ற தலையாரி விஏஓ அலுவலகத்தை திறந்து அரசு கோப்புகளை கையான்டு வருகிறார்.இதனால் பொதுமக்கள் ஓய்வுபெற்ற தலையாரி பணியில் உள்ளாரா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். தூத்துக்குடி தாலுகா அலுவலகத்துக்கு கட்டுப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் தற்போது தலையாரியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெரியநாயக்கபுரத்தை சேர்ந்த மணி கூறுகையில் நீண்ட நாட்களாக இந்த ஓய்வு பெற்ற தலையாரி இது போன்று தான் செயல்பட்டு வருகிறார் இவரை யாரும் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக இருந்து வருவதால் நியாயமான விஷயங்களுக்கு கிராம நிரவாக அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம் என்று கவலை தெரிவித்தார்