SHYAM NEWS
06.10.2023
கொடைக்கானலில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வரும் ஞாயிற்று கிழமை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் நுழைவு கட்டணம் ரத்து உள்ளது வனத்துறை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன உயிரின வார விழாவானது கொண்டாடப்படுகிறது, இதனை தொடர்ந்து வன உயிரின வார விழாவை முன்னிட்டு வரும் ஞாயிற்று கிழமை(08.10.2023) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை, மன்னவனூர் சூழல் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குள் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல நுழைவு கட்டணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக -வனத்துறை அறிவிப்பு செய்துள்ளது.