ஷ்யாம் நீயூஸ்
12.10.2023
தூத்துக்குடியில் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீடு செய்ய முடியாமல் மகளிர்கள் தவிப்பு.
தமிழக அரசால் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்க்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தது . விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மகளிர்கள் மேல்முறையீடு செய்ய இ சேவை மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் ஆனால் இ சேவை மையங்களில் மேல்முறையிடு செய்யும் லிங்க் வரவில்லை வேலை செய்யவில்லை நாளை வாருங்கள் நாளை மறுநாள் வாருங்கள் என்று பெண்களை அலைய விடுகின்றனர். இந்த மேல்முறையீட்டு மனுவை தூத்துக்குடி தாலுகா அலுவலகங்களில் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். வரும் 18ஆம் தேதி கடைசி தினம் என்பாதால் மகளிர்கள் வேலை வெட்டிக்கு செல்லாமல் இதே வேலையாக அலைகின்றனர். எளிதாக மேல் முறையீடு செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு மேல்மறையீடு செய்ய வந்த மகளிர்கள் கோரிக்கை வைத்தனர்.