ஷ்யாம் நீயூஸ்
29.12.2023
தூத்துக்குடியில் வெள்ளத்தன்று வேலைக்கு சென்றவர் பிணமாக மீட்பு
தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்தவர் அம்மாவாசை வயது 73 த/ பெ கண்ணாயிரம் வீரநாயக்கன் தட்டு கிராமம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் தொழிற்சங்க தலைவருமான ஒருவருடைய கெஸ்ட் ஹவுஸ் கட்டுமான பணிக்கு வாட்ச் மேனாக பணிபுரிந்து வந்தார் .கடந்த 17 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை அன்றிலிருந்து அவரை காணாமல் உறவினர்கள் தேடி வருகின்றனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி வந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை இடம் கோரிக்கை வைத்தனர் அரசு அதிகாரிகளிடம் கூறி தேடி தருவதாக உறுதி அளித்து சென்றிருந்த நிலையில் இன்று வீர நாயக்கன் தட்டு கிராமம் அருகில் உள்ள வாழை தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை புதுக்கோட்டை உதவி காவல் ஆய்வாளர் முத்துக்கருப்பன் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்