ஷ்யாம் நீயூஸ்
22.12.2023
டிராக்டரில் சென்று மாப்பிள்ளையூரணியில் நிவாரண பணியில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 இரு தினங்கள் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் புதியம்புத்தூர் கன்மாய் உடைப்பு ஏற்பட்டும் கட்டாற்று மழைநீரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்;சி பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசி நாடார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனிமொழி எம்.பி இம்முகாமிற்கு டிராக்டரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமின்றி நிவாரணங்கள் மற்றும் அரசு சார்ந்த அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
ஆய்வின் போது சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய திமுக துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, தர்மலிங்கம், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, மகேஸ்வரி, கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, மற்றும் கௌதம், ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதி கிளைச்செயலாளர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முழுமையாக பொதுமக்களுடன் இனைந்து தேவையான மீட்புபணிகளையும் உதவிகளையும் செய்து வருகின்றனர்.