ஷ்யாம் நீயூஸ்
07.12.2023
செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி!
தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பிற பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு தொழில் நுட்ப சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லூரி பேராசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்று கொடுப்பதற்காக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மூலம் சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறது. இதற்காக புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு பேராசிரியர்கள் கணினி துறையில் நவீன தொழில் நுட்ப பயிற்சி மற்றும் வளர்ச்சிகாக ரூபாய் 3 லட்சம் 50 ஆயிரம் நிதியை வழங்கியது. அதன் அடிப்படையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியை கல்லூரி முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சில் 20 பொறியியல் கல்லூரியை சேர்ந்த 65 பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சி பயனுள்ளதாக இருந்ததாக பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கணினித்துறை துறை தலைவர் பேராசிரியர் மாரியப்பன், வளாக மேலாளர் விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.