ஷ்யாம் நீயூஸ்
17.12.2023
தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு ! தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் முறையாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முறையாக தேர்தல் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, மாநகராட்சி பகுதி தேர்தலும் நடைபெற்றது.
அதில் 60 வார்டு உறுப்பினர்கள் தேர்வில் திமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றிப் பெற்றன. மேயராக ஜெகன் பெரியசாமி தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றப்பின் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளை முறையாக முறைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் தமிழக அரசின் சிறப்பு நிதியும் வழங்கப்பட்டு புதிய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிதாக கால்வாய் இல்லாத பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கப்பட்டு புறநகர் பகுதிகள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும், மக்கள் நலன் கருதி சாலை வசதி, புதிதாக ஏற்படுத்தப்பட்டு அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் புதுமையான மாநகராட்சி பகுதியாக உருவாகுவதற்கு அரசுதுறை அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் பார்வையிட்டு, மக்கள் நலன் தான் முக்கியம் என்று பாரபட்சமின்றி அனைத்து வார்டு பகுதிகளிலும் கட்டமைப்புகளை செய்து வருகிறார்.
பக்கிள் ஓடை பகுதியில் மழை காலங்களில் வரும் நீர் மட்டும் வருவதற்கும் மற்ற பல்வேறு பகுதிகளிலுள்ள தேவையற்ற கழிவுநீர்கள் தருவைகுளத்தில் உள்ள மறுசுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வகையில் பணிகள் இருந்து வருகின்றன.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாநகர பகுதியில் மழைநீர் எங்கும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கும் விதமாக மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமாருடன் கொட்டும் மழையில் மாநகராட்சிக்குட்பட்ட மடத்தூர், பண்டாரம்பட்டி, சங்கரபேரி, பக்கிள் ஓடை முகத்துவாரத்தையும் ராம்நகர், ரஹமத்நகர், உள்ளிட்ட இடங்களில் அவசர நடவடிக்கை மேற்கொண்டு, மழை நீர் வெளியேறுவதை பார்வையிட்டார்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிற்கிணங்க பல்வேறு பணிகளை முறையாக முறைப்படுத்தி மக்கள் நலன் தான் முக்கியம் என்ற தாரக மந்திரத்துடன், மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக நடைபெறாத பணிகளை நாங்கள் பொறுப்புக்கு வந்த 20 மாதங்களில் புதிய பணிகள் தொடங்கப்பட்டு, இதில் பல பணிகள் முடிவு பெற்றுள்ளன. எந்த கனமழை பெய்தாலும் மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காதவாறு துரித பணிகள் மேற்கொண்டுள்ளோம். எனவே பொதுமக்கள் யாரும் எந்த பயமும் கொள்ள வேண்டாம் தூத்துக்குடி மாநகரை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உயர்அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் மழைக்காலங்களில் மக்களுடன் உறுதுணையாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்கு உடனிருப்பார்கள். ஏதாவது ஒரு பகுதியில் குறைபாடுகள் இருந்தால் அதை உடனடியாக 18002030401 என்ற கால்செண்டர் எண்ணானது மழை முடியும் வரை 24 மணி நேரமும், மேலும் 8754299969 இந்த வாட்சப் எண்ணிலும் என்னை தொடர்பு கொள்ளலாம் எனது கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமியின் செயல்பாட்டை கண்டு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.