ஷ்யாம் நீயூஸ்
11.12.2023
மாற்றுத்திறனாளிகள் இல்லாத தூத்துக்குடி ஆக மாற்றுவோம் தூத்துக்குடி மேயர் பேச்சு
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.துாத்துக்குடி துாய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று(10.12.2023) மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசும்போது மாற்றுத்திறனாளிகலே இருக்கக் கூடாது என நம் முதல்வர் நினைக்கிறார் பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு செய்துவருகிறது.மத்திய அரசு திட்டங்களையும் பெற்றுத் தந்துள்ளோம் கல்வி அசைக்க முடியாத சொத்து சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமை உள்ளது. இன்னும் அவர்களுக்கான எல்லா உதவிகளையும் பெற்று தரப்படும் மாற்று திறனாளிகள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்றவேண்டும் என தெரிவித்தார்.நலத்திட்டவிழாவில் , கல்வி உதவித்தொகை,
தையல் இயந்திரம், சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநிலத் தலைவர் மருதப்பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ்,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தொழிலதிபர் விவேகம் ரமேஷ், லயன்ஸ் கிளப் டேவிட் கோர்ட் ராஜா, வழக்கறிஞர்கள் முருகன், அரிராகவன், சமுக ஆர்வலர் கிருஷ்ண மூர்த்தி மாமன்ற உறுப்பினர்கள் .சுகாதாரத் துறை குழு தலைவர் சுரேஷ்குமார் நாகேஸ்வரி பகுதி செயலாளர் ரவி மற்றும் மாவட் டத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்