ஷ்யாம் நீயூஸ்
03.12.2023
விஜயகாந்த் உடல்நலம் பெற தூத்துக்குடி தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு பூஜை.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை குறைவாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற்று விரைவில் மீண்டு வர வேண்டுமென தூத்துக்குடி மாநகர் தேமுதிக சார்பில் வேம்படி இசக்கியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர மாவட்ட தேமுதிக செயளாலர் தயாளுலிங்கம் தலமைதாங்கினார் , பூஜைக்கான ஏற்பாடுகளை பொதுக்குழு உறுப்பினர் சின்னதுரை, செல்வம் ஆகியோர் செய்திருந்தனர் செயற்குழு உறுப்பினர் ராஜபம்மு மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.