ஷ்யாம் நீயூஸ்
21.12.2023
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பெய்து வரும் கனமழையின் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் பொருளாதார சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்திஉள்ளது. இன்று தூத்துக்குடியில் உள்ள வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடி சென்மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் நிவாரண பொருட்களை வழங்கினார்.