ஷ்யாம் நீயூஸ்
06.12.2023
தலைக்கு மேல் கட்டணம் உயர போகிறது!
தூத்துக்குடி மாவட்ட முடித்திருத்துவோர் மற்றும் மருத்துவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சி.ஐ.டி.யூ மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது .மாவட்ட தலைவர் டென்சில் தலமை தாங்கினார். கூட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ரசல் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறுகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் கட்டிங், ஷேவிங் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வரும் ஜனவரி 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி கட்டிங் 130, ஏசி சலூன் 150, மாடல் கட்டிங் 200, ஏசி சலூன் 250, சேவிங் 80, ஏசி சலூன் 100, சிறுவர் கட்டிங் 5 வயது உட்படவர்களுக்கு 100, ஏசி சலூன் 120, தாடி ஒதுக்குதல் 100, ஏசி சலூன் 120 கட்டிங் & சேவிங் டை 350, ஏசி சலூன் 400, ஹெட் மசாஜ் 220 ஏசி சலூன் 250, பேபி கட்டிங் 150 ஏசி சலூன் 200, ஸ்பெஷல் சேவிங் போம் 100 ஏசி சலூன் 150, தலைவழித்தல் மற்றும் சேவிங்கிற்க்கு 250 ஏசி சலூன் 300 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.