தூத்துக்குடியில் வரும் 4,5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். ஏ.ஜ.டீ.யூசி.தொழிற்சங்கம் கோரிக்கை !
ஷ்யாம் நீயூஸ்
02..08.2023
தூத்துக்குடியில் வரும் 4,5 தேதிகளில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். ஏ.ஜ.டீ.யூசி.தொழிற்சங்கம் கோரிக்கை !
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரில் ஆகஸ்ட் மாதம் 4 ,5 ம் தேதிகளில் உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா திருவிழாவும் தங்கத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.இந்த திருவிழாவிறக்கு தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஜாதி மதம் இன்றி பனிமய மாதா திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி உலா வர இருப்பதால் தேர் திருவிழாவை காண பல லட்சம் மக்கள் தூத்துக்குடி நகரில் ஒன்று கூட உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 4,5 தேதிகளில் மூட ஆணையிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திறக்கு டாஸ்மாக் ஏ.ஜ.டீ.யூ.சி பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் மனு அளித்தார் .உடன் தூத்துக்குடி டாஸ்மாக் ஏ.ஜ.டீ.யூ.சி பணியாளர் சங்கம் நிர்வாகிகள் ராஜபாண்டி முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்