அதிமுக கரைவேட்டியை கட்டுவதற்கு ஓபிஎஸ்க்கு உரிமையில்லை! தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன் பேட்டி.
ஷ்யாம் நியூஸ்
25.08.2023
அதிமுக கரைவேட்டியை கட்டுவதற்கு ஓபிஎஸ்க்கு உரிமையில்லை! தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன் பேட்டி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின்னர் அதிமுக தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு ஓபிஎஸ் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தானர். ஆனால் அதிகமான மாவட்ட செயலாளர்கள் ஒற்றைத் தலைமையை ஏற்று எடப்பாடி தலைமையில் அதிமுக ஒற்றை தலைமையில் இயங்கும் என பொது குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் பலமுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று வந்த தீர்ப்பில் பொதுக்குழு எடுக்கம் முடிவு செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சண்முகநாதன் கூறுகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற போது அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஆதரித்தனர் அதேபோல் தலைமை கழக நிர்வாகிகளும் ஆதரித்தனர் அதற்கு பின்னர் ஒற்றை தலைமை இருக்கக் கூடாது என்று ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து வந்தார் இந்த நிலையில் இன்று சென்னை நீதிமன்றம் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை செல்லும் என்றும் ஓபிஎஸ்ஐ நீக்கியது செல்லும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது .
இது எடப்பாடி யார் பழனிச்சாமிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். இதற்குப் பின்னும் ஓபிஎஸ் அதிமுக கரை வேட்டியை கட்டுவதற்கோ அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கோ சின்னத்தை பயன்படுத்துவதற்கோ உரிமை இல்லை. திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் இனிமேல் திமுகவோடு அல்லது சசிகலாவோடோ தினகரனோடோ தான் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் அவருக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.