ஷ்யாம் நியூஸ்
30.08.2023
தூத்துக்குடியில் மதுக்கடை இல்லாத வாடாக மாற்ற வேண்டும் அதிமுக கவுன்சிலர் மேயருக்கு கோரிக்கை!
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று(30.08.2023) மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினரும் ,
மாநகராட்சி அதிமுக எதிர் கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி பேசுகையில்...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஜாதியின் பெயரில் எந்த சாலையும் இல்லாத வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சாதியின் பெயரில் உள்ள தெருக்களை உடனடியாக தேசதலைவரின் பெயரில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தூத்துக்குடி
51 வது வார்டில் செயல்பட்டு வரும். இரண்டு டாஸ்மார்க் கடைகளையும் அகற்றி மது இல்லாத வார்டாக
51 வது வார்டை
மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி மாநகர பகுதியில் மதுவால் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவே மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்ற அவர் மாநகராட்சி பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாடுஏற்படும் சூழ்நிலை வருவதற்கு முன்னரே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்று தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு வழக்கமாக வழங்கும் தண்ணீரின் அளவை விட குறைத்து வழங்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி 51 வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் , திரு.வி.க நகர் பகுதிகளில் அதிக மின்னழுத்தம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளது மின்சார பிரச்சனை குறித்து மின்வாரியத்திற்கு தகவல் அளித்தால் முறையான
நடவடிக்கை எடுப்பதில்லை எனவே தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் வயர்மேன் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என அதிமுக மாமன்ற உறுப்பினரும்,
அதிமுக எதிர்க்கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி
மாநகராட்சி கூட்டத்தில்
வலியுறுத்தினார்.