முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

 ஷ்யாம் நியூஸ் 29.09.2022 மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.  தூத்துக்குடி தமிழக அரசு பேரூராட்சி ஊராட்சி பகுதிகளிலுள்ள பெரிய சிறிய குளங்கள் அனைத்தையும் மழைகாலத்திற்கு முன்பு முழமையாக செய்ய வேண்டிய பாராமரிப்பு பணிகள் தூர்வாறும் பணிகளை மேற்கொண்டு அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் பொதுமக்கள் குடிப்பதற்கும் மற்ற உபயோகத்திற்கும் ஐந்தறிவு ஜீவன்கள் தாகம் தீர்ப்பதற்கும் தண்ணீர் அதிக அளவில் தேக்கி வைக்க வழிவகை செய்திட வேண்டும் என்று கூறியுள்ளப்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பி;ள்ளையூரணி ஊராட்சியில் உள்ள பெரியகம்மா தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்;நடைத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்;சி பகுதியிலுள்ள பெரியகம்மா மற்றும் சிறியகம்மா ஆகிய கம்மாக்கள் தூர்வாரி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரு கம்மாக்களுக்கும் சேர்த்து 48லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி தொடக்க விழா ப...

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

ஷ்யாம் நியூஸ் 29.09.2022 தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.       தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள்.     கூட்டத்தில் மாநகராட்சி நகராட்சியாக இருந்து 5.8.2008 முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது அருகிலுள்ள தூத்துக்குடி ரூரல் சங்கரபேரி மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய 5 பஞ்சாயத்துகள்; பகுதி சேர்த்து 60 வார்டுகள் உள்ளடக்கியதாகும், மாநகராட்சிக்கான அடிப்படை பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் அரசிடமிருந்து அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மாநகராட்சி பொதுசுகாதாரம் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள போதிய நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை படி அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களை தனியார் மூலமாக மாமன்ற அனுமதியுடன் ஓப்பந்தபுள்ளி பெற்று நடவ...

தூத்துக்குடி டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை பணிக்கு வரச் சொல்லுங்கள் தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளருக்கு கோரிக்கை!

 தூத்துக்குடி டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை பணிக்கு வரச் சொல்லுங்கள் தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளருக்கு கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டத்தில் 155 க்கு மேற்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படுகின்றன இக்கடையில் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் உதவி விற்பனையாளர்கள் என தலா ஒரு கடைக்கு நான்கு ஐந்து நபர்கள் பணி புரிகின்றனர். தூத்துக்குடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் தினமும் தான் பணி நியமிக்கப்பட்ட கடைகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக எழுந்து வருகிறது. ஒரு சில விற்பனையாளர்கள் மேற்பார்வையாளரின் மிரட்டலுக்கு பயந்து மாவட்ட மேலாளர் இடம் தங்கள் குறையை சொல்ல சந்தர்ப்பம் கிடைக்காமலும் பயத்திலும் மேற்பார்வையாளர்களின் பணிகளை செய்து சேவகம் செய்து வருகின்றனர். இதனால் மேற்பார்வையாளர்கள் 75 சதவீதம் கடை பக்கம் வருவதில்லை மாவட்ட மேலாளர் கடை பக்கம் வருவதாக அறிந்தால் மட்டுமே தாங்கள் கடையில் பணிபுரிவது போல் நாடகம் நாடி முதலில் வந்து நிற்கிறார்கள் .இதற்கு டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மாதம் மாதம் கப்பம் வாங்குவதால் மேலாளரின் அதிரடி நடவடிக்கையை முன்னதாகவ...

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேரனுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து

 ஷ்யாம் நியூஸ் 28.09.2022 தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேரனுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருனாநிதி தலைமையிலான அமைச்சரவையில் 2006ம் ஆண்டு 11ம் ஆண்டு வரை சமூக நலத்துறை அமைச்சராக கீதாஜீவன் பணியாற்றினார். தொடர்ந்து பொதுவாழ்வில் 26 ஆண்டுகள் பணியாற்றி வரும் கீதாஜீவன் தற்போது வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வரும் அவர் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மீண்டும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட செயலாளர்களில் பெண்சிங்கம் என்று நிர்வாகத் திறமை உள்ளவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாநகர பகுதியில் உள்ள வட்டச்செயலாளர்கள் மற்றும் இதர பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ப...

தூத்துக்குடியில் தூய்மை பணி வாகனம் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

 ஷ்யாம் நியூஸ் 28.09.2022 தூத்துக்குடியில் தூய்மை பணி வாகனம் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினசரி எல்லா பகுதிகளிலும் பொதுமக்கள் பயன்;படுத்திய தேவையற்ற கழிவுகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் சுகாதாரத்தை முழுமையாக அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்ற அடிப்படையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை தேவையற்ற நெகிழிகளை பயன்படுத்தக்கூடாது அதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது. பொதுமக்களுக்கும் குப்பைகளை பிரித்து கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். அனைத்து பகுதிகளுக்கும் தூய்மை பணிகளுக்கான வாகனம் சரியான நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்க...

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. கேள்விக்கு பதிலளிக்க திணறிய அதிகாரிகள்

 ஷ்யாம் நியூஸ் 27.09.2022 தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்.பி. கேள்விக்கு பதிலளிக்க திணறிய அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைச்சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 2021-2022ம் ஆண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு துறையின் சார்பிலும் நடைபெற்ற பணிகளை கனிமொழி எம்.பி. நேரடியாக அதிகாரிகளிடம் தங்களது துறைசார்ந்த பணிகளையும் நடைபெற வேண்டியவைகள் குறித்து வினா எழுப்பினார். அதற்கு ஒருசில அதிகாரிகள் மட்டும் பதிலுரையில் திருப்தி அடைந்த கனிமொழி பல்வேறு துறை சார்ந்தஅதிகாரிகளின் பதிலுரை திருப்தி இல்லாத நிலையில் அதிகாரிகள் மத்தியில் பேசும்போது இதுபோன்ற கூட்டத்திற்கு வரும்போது நடைபெற்ற பணிகள் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து முழுமையான திட்டத்தோடு கூட்டத்தில் பங்குபெற வேண்டும் என்றார். இருப்பினும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தங்களது ...

தூத்துக்குடி மாநகர பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

 ஷ்யாம் நியூஸ் 27.09.2022 தூத்துக்குடி மாநகர பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மழைகாலத்திற்குள் முடித்து மக்களின் பாதுகாப்பு போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநகர பகுதிகளில் நெருக்கடிகள் இல்லாமல் வாகனங்கள் சென்று வருவதற்கு பல்வேறு பகுதிகளில் தேவையற்ற மற்றும் சிறிய பெரிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய போக்குவரத்து சாலைகளையும் மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கியுள்ளது. குறுகலான சாலைகள் பல பகுதிகளில் விரிவான சாலைகளாக மாறியுள்ளது. சாலைகளில் தேவையற்ற மணல் திட்டுகள் சிறிய பெரிய முட்புதர்கள் செடிகள் குப்பைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்காணிப்பில் ஊழியர்கள் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அவ்வப்போது மாநகராட்;சி பகுதியில் நடைபெறும் பணிகளை எந்த நேரம் என்று பார்க்காமல் ஆய்வுகளை மேயர் ஜெகன் பெரியசாமி செய்து வருகிறார். இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் செல்லும் சாலையில் தற்போது நடைபெற்று வரும் மணல் திட்டுகள் அகற்றும் பணிகளையும் கடற்கரை சாலையில் நடை...

தூத்துக்குடியில் அனைத்து அம்மன்களின் சப்பரபவணி இந்து முன்னனி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஷ்யாம் நியூஸ் 25.09.2022 தூத்துக்குடியில் அனைத்து அம்மன்களின் சப்பரபவணி இந்து முன்னனி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.       தூத்துக்குடி மாநகர் சப்பரப்பேரணி 40ம் ஆண்டு விழா சம்பந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் இந்து முன்னனி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.     ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து அம்பாள்களின் சப்பரப் பேரணி கமிட்டி தலைவர் தனபாலன், துணைத் தலைவர் வன்னியராஜ் ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், செயலாளர் ஆதிநாதஆழ்வார், பொருளாளர் இசக்கி முத்துக்குமார், அமைப்பாளர் சிவகுமார் அனைத்து கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பாரதமாதா ஊர்வலத்தின் தலைவராக கனகராஜ் தலைமை ஏற்க முடிவு செய்யப்பட்டது.      சப்பர பேரணி விழா சிறப்பாக நடைபெற ஆலோசனை கூட்டத்தில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் மற்றும் மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் கீதாசெல்வ மாரியப்பன், கிருஷ்ணராஜபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் சார்பாக  ஆறுமுகபாண்டி, மாடசாமி தங்ககுமார்...

தூத்துக்குடி கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சுபாஷ் பண்ணையார் சந்திப்பு

ஷ்யாம் நியூஸ் 25.09.2022 தூத்துக்குடி கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சுபாஷ் பண்ணையார் சந்திப்பு தூத்துக்குடி வெங்கடேஷ் பண்ணையார் 19ம் ஆண்டு வீரவழிபாடு நிகழ்ச்சி நாளை தூத்துக்குடி அருகேயுள்ள மூலக்கரை அம்மன்புரத்தில் நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.      இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் மாநில திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோரை நேரில் சந்தித்து பனங்காட்டு மக்கள் கழகம் நிறுவனத்தலைவர் சுபாஷ் பண்ணையார் அழைப்பிதழ் வழங்கினார்.      பனங்காட்டு மக்கள் கழக மாநில வக்கீல் அணி செயலாளர் சிலுவை, தென்மண்டல செயலாளர் சொர்ணவேல்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஓடை செல்வம், வடக்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜ...

தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது

 ஷ்யாம் நியூஸ் 22.09.2022 தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று(21.09.2022) மாலை தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவராக காதர் மைதீன்( கலைஞர் டிவி) செயலாளராக அண்ணாத்துரை (குமுதம் ரிப்போர்ட்டர்) பொருளாளராக மாரிமுத்துராஜ்( மாலை முரசு )துணைத் தலைவராக லட்சுமணன்( தூர்தர்ஷன்) இணைச் செயலாளராக  கார்த்திகேயன்(ஜூனியர் விகடன்) ஆகியோர் போட்டியின்றி மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற கௌரவ ஆலோசகர் அருண் (ஜெயா டிவி )பதவி பிரமாணம் செய்து வைத்தார் மன்ற கெளரவ ஆலோசகர் வசீகரன், மூத்த உறுப்பினர் பாஞ்சை கோபால்சாமி உட்பட மன்ற உறுப்பினர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் . புதிதாக பிரஸ் கிளப் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட காதர் மைதீன் ஏற்புரையாற்றினார் மன்ற செயலாளர் அண்ணாதுரை நன்றியுரையாற்றினார்.

கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஷ்யாம் நியூஸ் 19.09.202  கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.     தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி டேவிஸ்புரம் மெயின் ரோட்டிலிருந்து நடைபெற்ற 9 மைல் தூரம் நடைபெற்ற 11 ஜோடி பெரிய மாட்டுவண்டி போட்டி, 7 மைல் தூரம் நடைபெற்ற 22 ஜோடி சிறிய மாட்டுவண்டி போட்டி, 6 மைல் தூரம் நடைபெற்ற 46 ஜோடி பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சீறி பாய்ந்து வந்த மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் ஆறுதல் பரிசுகளும் கோவிலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.     நிகழ்ச்சியில் கோவில் தலைவர் மாடசாமி, செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் சின்னமுத்து, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, திமுக பகுதி செயல...

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்..

 ஷ்யாம் நியூஸ் 17.09.2022 தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி..!பாலிதீன்-பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தல்.. தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் .ஒரே நாளில் 28டன் குப்பைகள் அதிரடியாக அகற்றம். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் ஒரே நாளில் 28டன் குப்பைகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் சாதனை படைத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்குமாறு மேயர் ஜெகன்பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார். உலக கடல் தூய்மை தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரையோர கிராமங்கள், கடற்கரையோர பூங்காங்கள் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் செப்.17ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை வரையிலான வார விடுமுறை நாட்களில் மெகா தூய்மை பணிகளை அந்தந்த பகுதிகளிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்பேரில் உலக கடல் தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட...

ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 ஷ்யாம் நியூஸ் 17.09.2022 ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  கல்லூரி தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் கிப்சன், வஉசி பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ், திருமண்டல உப தலைவர் தமிழ் செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் , மேல்நிலை பள்ளி மேலாளர் பிரேம்குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளரும் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான வட்டக்கோவில் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன், கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 ஷ்யாம் நியூஸ் 17.09.2022 தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமூகநீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தூத்துக்குடி பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரோ யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன் சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்திறவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஓப்படைத்துக்கொள்வேன் மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என்று மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி மொழியை படிக்க செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவ...

தூத்துக்குடி பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார்.

 ஷ்யாம் நியூஸ் 17.09.2022 தூத்துக்குடி பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். தூத்துக்குடி பெரியார் 144வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செலயாளர் ஆறுமுகபெருமாள், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம். தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுரேஷ்காந்தி, சுப்பிரமணி, ராமசாமி, இளையராஜா, ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகி;ருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி நாகராஜன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் கணேசன், ரெங்கசாமி, வக்கீல் ரகுராமன், பூங்குமார், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், ஊரா...

தூத்துக்குடியில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் ,மேயர் ஜெகன் பெரியசாமி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 ஷ்யாம் நியூஸ் 17.09.2022 தூத்துக்குடியில் பெரியாரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் ,மேயர் ஜெகன் பெரியசாமி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இன்று தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது பெரியாரின் பிறந்த நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமூக நீதி நாளாக அறிவித்தார் அன்று முதல் பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது பெரியாரின் பிறந்த நாளான இன்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் கீதா ஜீவன் ,மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மற்றும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பு சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் மாநகர் திமுக வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து  திமுக சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

பெரியாரின் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி ஆதிதமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 ஷ்யாம் நியூஸ் 17.09.2022 பெரியாரின் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி ஆதிதமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இன்று தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது பெரியாரின் பிறந்த நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமூக நீதி நாளாக அறிவித்தார் அன்று முதல் பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது பெரியாரின் பிறந்த நாளான இன்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஆதி தமிழர் கட்சியினர்  மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் செயலாளர் மு.ஊர் காவலன் ,மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஆற்றலரசு, அகரம் சத்தியா, மாவட்ட துணைச் செயலாளர் சித்திரவேல் ,மாவட்ட பொருளாளர் இளஞ்சேகரன், மாவட்ட இளைஞரணி பெ அன்பரசு, தென்மண்டல அமைப்பாளர் க.வே சுரேஷ் வேலன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சக்தி சேகுவாரா மற்றும் பல ஆதித்தமிழர் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாப்பிள்ளையூரணி முனியசாமி முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

 ஷ்யாம் நியூஸ் 17.09.2022 மாப்பிள்ளையூரணி முனியசாமி முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட வன்னார்பேட்டை திருக்குறிப்பு தொண்டர் நாயனார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முனியசாமி கோவில் 40வது ஆண்டு கொடைவிழாவை முன்னிட்டு மதிய கொடை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு பின்னர் சமபந்தி அன்னதானம் நடைபெ;றது. விழாவில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக ஓன்றிய செயலாளர் சரவணக்குமார் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் பெருமாள் செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் திருமேணி, துணைத்தலைவர் சென்ட் மாடசாமி, துணை;சசெயலாளர் காளியப்பன், ஆலோசகர்கள் பரமசிவன், குமாரலிங்கம், பொய்யாழி, பிச்சையா, மாடசாமி, சக்திவேல், கமிட்டி உறுப்பினர்கள் கனகராஜ், அழகர்சாமி, சுடலைகுமார், சதிஷ்வேல், கோவில் அர்ச்சகர் கனபதி சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர். இதே போல் எஸ்.காமராஜ...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு 14 கோடி ஓதுக்கீடு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி

 ஷ்யாம் நியூஸ் 15.09.2022 தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு 14 கோடி ஓதுக்கீடு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாளில் இருந்து மாநகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளை நேரடியாக ஆய்வு செய்து பணியை விரைப்படுத்தி வருகிறார். குறிப்பாக பருவ மழையை முன்னிட்டு வடிகால் அமைக்கும் பணியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகள் மற்றும் ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.      மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை மாதம் 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் ‘மாஸ் கிளினிங்’ பணிகளும் நடைபெறுகிறது.  பேருந்து நிறுத்துமிடங்களில் தேவையற்ற வால்போஸ்டர் மற்றும் சிறுமுட்புதர்களை அகற்றுவது. சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவது போன்ற பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் தூய்மைப் பணிகளை அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...

தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, மாலை அணிவித்தார்.

 ஷ்யாம் நியூஸ் 15.09.2022 தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, மாலை அணிவித்தார்.        தூத்துக்குடி அண்ணா 114வது பிறந்தநாளை யொட்டி காமராஜர் காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு கனிமொழி எம்.பி, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.        வடக்கு மாவட்ட திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செலயாளர் துறைமுகம் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி அமைப்பாளர்கள்; மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மோகன் தாஸ் சாமுவேல், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்ச...

மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார்

ஷ்யாம் நியூஸ் 14.09.2022  மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சண்முகக்கனி, கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோபால், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு சோட்டையன் தோப்பு விடுதலை சிறுத்தை கட்சி முகாம் செயலாளர் ரஞ்சித்குமார், வழக்கறிஞர் பிரிவு அர்ஜுன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.      விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவரும் எம்.பியுமான தொல் திருமாவளவன் படிப்பகத்தை திறந்து வைத்து வருகை பதிப்வேட்டில் கையெழுத்திட்டு புத்தர் சிலையை திறந்து வைத்து பேசுகையில் இந்த பகுதியில் இப்படி ஓரு படிப்பகம் அமைவதற்கு காரணமாக இருந்த நிர்வாகிகளை முதலில் பாராட்டுகிறேன். ஓவ்வொரு ஊரிலும் இது போன்ற படிப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்று எனது 60வது பிறந்தநாள் விழாவில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் முதன் முதலில் வடக்கு சோட்டையன் தோப்பில் தான் அதை நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள். இதற்க...

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் காற்று மாசுகட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.

 ஷ்யாம் நியூஸ் 14.09.2022 தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் காற்று மாசுகட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.       தூத்துக்குடி மாநகராட்சி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து நடத்தும் காற்று மாசுகட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். மாநகராட்சி மைய அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.    பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பிரச்சார பேரணியில் “மரம் நடுவோம் மழை வளம் பெறுவோம்” “புகை நமக்கு பகை” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை மாணவ மாணவிகள் ஏந்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணி மீண்டும் மாகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.   விழிப்புணர்வு பேரணியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி பொறியாளர் ரூபன் சு...

தொல். திருமா தூத்துக்குடி வருகை !அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார் .

 ஷ்யாம் நியூஸ் 13.09.2022 தொல். திருமா தூத்துக்குடி வருகை !அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். தூத்துக்குடியின் மையப்பகுதியில் தமிழ் சாலையில் சட்டமேதை அம்பேத்கார் திருஉருவ சிலையை நிறுவி நந்தமிழர் அமைப்பினர் பராமரிப்பு செய்து வருகின்றனர். தற்போது அம்பேத்கர் சிலை மறு சிறுமைப்பு செய்யப்பட்டு பாராளுமன்றம் வடிவிலான கட்டட அமைப்பை உருவாக்கி பாராளுமன்றத்தின் மையப் பகுதியில்  டாக்டர் அம்பேத்கர் நிர்ப்பது போன்று அம்பேத்கரின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது ஏழரை அடி உயரம் 650 கிலோ எடை கொண்ட இந்த திருவுருவச்சிலை 9 லட்சம் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது .அம்பேத்கரை முழுமையாக படித்தவரும் அம்பேத்கரின் நூல்களை முழுமையாக படித்தவரும் அம்பேத்கரின் கொள்கையை முழுவதுமாக பின்பற்றி வரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் வரும் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து  வைக்க தூத்துக்குடி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி  தமிழக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனி...

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி சங்க கூட்டம் நடைபெற்றது.

 ஷ்யாம் நியூஸ் 12.09.2022 தூத்துக்குடியில் டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி சங்க கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி சி பி ஐ கட்சி மாவட்ட அலுவலகத்தில் ஏ ஐ டி யூ சி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க கூட்டம் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஏ ஐ டி யூ சி நிர்வாகி காளிமுத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று வருடங்களாக கிடங்கில் பணியாற்றிய ஊழியர்களை மீண்டும் கடையில் பணியமர்த்திய மேலாண்மை இயக்குனர் , மண்டல மேலாளர் அதற்கு முயற்சி செய்த மாநில செயலாளர் டி.தனசேகரன் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன், ஏ ஐ டி யூ சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது டாஸ்மாக் பணியாளருக்கு போனஸ் 40% ஆகவும் மற்றும் பண்டிகை கால சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு ஏற்ப பணியாளர்களை பணி நிரவல் செய்யவும், இறந்த பணியாளர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்கவும், குறைந்த விலை மது புட்டிகளை அதிகளவு கடைகளுக்கு அனுப்பி வைக்கவும், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் ,13. 9 .202...

தூத்துக்குடியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நியூஸ் 12.09.2022 தூத்துக்குடியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.     தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தி;ட்டம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு படி தூத்துக்குடி புனித பிரான்;சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ரிக்டா 245 பேருக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது உள்பட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதே போல் சிவ அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்;சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி 65 பேருக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியாகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி பெரியநாயகிபுரம் சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

 ஷ்யாம் நியூஸ் 10.09.2022 தூத்துக்குடி பெரியநாயகிபுரம் சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் பெரியாகிபுரம் கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட சுடலை மாடசுவாமி திருக்கோவில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளத்தில் 52 செண்டு சுடலமாடசாமி சுவாமி  சக்தி பீடமாக இருந்து பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார். இக்கோயிலின் புரனாவர்த்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. உச்சிக்கால பூஜை மற்றும் தீபா ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கோரம்பள்ளம் சுற்றியுள்ள 32 கிராம ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு  சுடலைமாடசாமியின் ஆசி பெற்றனர்.  அதன் பின் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பெரியநாயகிபுரம் பொதுமக்கள் சார்பாக ஊர் தலைவர் மணிகண்டன் மற்றும் சுடலைமாட சுவாமி கோவில் நிர்வாகிகள் கும்பாபிஷேக விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மணல்திட்டு அகற்றும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

 ஷ்யாம் நியூஸ் 10.09.2022 தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மணல்திட்டு அகற்றும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.    தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாளில் இருந்து மாநகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளை நேரடியாக ஆய்வு செய்து பணியை விரைப்படுத்தி வருகிறார். குறிப்பாக பருவ மழையை முன்னிட்டு வடிகால் அமைக்கும் பணியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகள் மற்றும் ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை மாதம் 2; மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் ‘மாஸ் கிளினிங்’ பணிகளும் நடைபெறுகிறது.  பேருந்து நிறுத்துமிடங்களில் தேவையற்ற வால்போஸ்டர் மற்றும் சிறுமுட்புதர்களை அகற்றுவது. சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவது போன்ற பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் தூய்மைப் பணிகளை அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,...

மாப்பிள்ளையூரணி கபாடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.

 ஷ்யாம் நியூஸ் 10.09.2022 மாப்பிள்ளையூரணி கபாடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.   தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட மாதாநகர் சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதல்படி மாதாநகர் எம்எஸ்டி கபாடி குழுவின் 3ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி போட்டி கோவில் மைதானத்தில் நடைபெற்றது.      பெண்களுக்கான இறுதி போட்டியில் திருநெல்வேலி பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல்பரிசும்,  தென்காசி ஜிபோர்ட்ஸ் அணி இரண்டாவது பரிசும், மாதாநகர் எம்எஸ்டி கபாடி குழு மூன்றாவது பரிசும், மதுரை சிபிஆர் கபாடி குழு நான்காம் பரிசு உள்பட வெற்றி பெற்ற 8 அணிகளுக்கு பரிசு கோப்பையும் பரிசு தொகையும் சிறப்பாக விளையாடியவர்களுக்கு ஊக்க தொகை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் வழங்கினார். விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி எ...

தேசிய குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார்

 ஷ்யாம் நியூஸ் 09.09.2022 தேசிய குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை தூத்துக்குடி மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார். தேசிய குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டூவிபுத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடல் புழு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு மாத்திரை வழங்கி தொடங்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ ,சுகாதார இணை இயக்குனர் பொற்செல்வன் ,மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா ,மாநகர் நலன் அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன் ,,அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், வட்டப் பிரதிநிதி குமார்  ,போல்பேட்டை பகுதி பிரதிநிதியும் மேயரின் நேர்முக உதவியாளருமான பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ,பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறியுள்ளார்.

ஷ்யாம் நியூஸ் 09.09.2022 மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை மழை பெய்தாலே மாநகரிலுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் மழைநீர் குளம் போல தேங்கி விடுவது என்பது  வழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால், மழைக்காலங்களில் மாநகர மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்பெரியசாமி தமிழக முதல்அரைமச்சரின் அறிவுறுத்தல்படி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கிடாத வகையிலான அடிப்படை பணிகளை முதல்கட்டமாக துவங்கி அவற்றை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதோடு இப்பணிகளை நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து துரிதப்படுத்தியும் வருகிறார். இதன்படி மாநகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வரும் பருவமழையினை கருத்தில்கொண்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளாக குடியிருப்புகள், முக்கிய சாலைகள் போன்ற இடங்களில் மழைநீர் தேங்கிடாத வகையில் புதியதாக மழைநீர் வடிகால...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்

 ஷ்யாம் நியூஸ் 07.09.2022 தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை நகருக்குள் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு இருக்கும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி மழைகாலத்திற்கு முன்பாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி பண்டுக்கரை சாலையில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலைப்பணிகள் முடிக்கப்பட்ட பகுதிளையும், முடியாமல் இருக்கும் பகுதிகளையும், கருத்த பாலம் அருகில் ஆரம்பமாகப் போகும் புதிய கான்க்ரீட் சாலை மற்றும் பாதாளச் சாக்கடை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மாநகராட்சி உதவி பொறியாளர் காந்திமதி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் வான்மதி, மாநகராட்...

திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!

ஷ்யாம் நியூஸ் 06.09.2022  திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!! தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மானாடு, தண்டபத்து பகுதியில் அரசு நிலங்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய  துணிகரமாக  மணல் கொள்ளை நடந்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர்  கே.என். இசக்கிராஜா  தேவர் மனு அளித்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அவர் அளித்த மனுவில் தெரித்துள்ளதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி சமூக பணிகளை செய்து வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம் பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் உடன்குடி பவர் பிளாண்ட் அருகில் மானாடு தண்டுபத்து கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொ...

நாளை தூத்துக்குடி வரும் முதல்வரை வரவேற்க தூத்துக்குடி மாவட்டம் திமுக சார்பாக மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 ஷ்யாம் நியூஸ் 06.09.2022 நாளை தூத்துக்குடி வரும் முதல்வரை வரவேற்க தூத்துக்குடி மாவட்டம் திமுக சார்பாக மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  நாளை காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர்   வர இருப்பதால் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில்  நாளை காலை 9.30 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது   இதனைத் தொடர்ந்து கழக உடன்பிறப்புகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர  நகர பேரூர் ஒன்றிய பகுதி கழக செயலாளர்ள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், வட்டக் கழக செயலாளர், பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, உட்பட்ட அனைத்து அணிகளை சேர்ந்த மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்...

தூத்துக்குடியில் வ.உ.சி; 151 வது பிறந்தநாள் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

 ஷ்யாம் நியூஸ் 06.09.2022 தூத்துக்குடியில் வ.உ.சி; 151 வது பிறந்தநாள் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.    தூத்துக்குடி  செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வஉசி 151வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உசி யின் முழுவுருவ சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.     இந்நிகழ்ச்சியில்  அதிமுக பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  ராஜகோபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் தொகுதி வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், இணை செயலாளர் ஞாயம் ரொமால்ட், மாவட்ட ஜெ பேரவை மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், வடக்கு மாவட்ட தலைவி சாந்தா, மாவட்ட பிரதிநிதி ஜான்சிராணி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ரூஸ்வெல்ட், கிளமென்டஸ், ஜெனோபர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயரா...

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு இம்பா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நியூஸ் 06.09.2022 தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு இம்பா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.     தூத்துக்குடி வஉசி 151வது பிறந்தநாளை முன்னிட்டு பிள்ளைமார் முதலியார் சமுதாய கூட்டு இயக்கமான மாவட்ட இம்பா சார்பில் வஉசி சிலைக்கும் படத்திற்கும் மாலை அணிவித்து 151 பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கோலப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துவிஜயன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜசேகர் வரவேற்புரையாற்றினார். 151 பெண்களுக்கு மாநில மகளிர் அணி செயல்தலைவர் பேராசிரியர் வேலம்மாள், மாவட்ட தலைவர் ராஜா, ஆகியோர் வழங்கினார்கள்.      விழாவில் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் அருண், துணைத்தலைவர் செந்தில்குமார், துணைச்செயலாளர்கள் சரவணன், முருகானந்தம், பாக்கியராஜ், பார்த்தசாரதி, சௌந்தர்ராஜன், இணைச்செயலாளர் பொன்லட்சுமணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருச்சிற்றம்பலம், மகளிர் அணி செயலாளர் சொர்னலதா, துணைதலைவர்கள் செல்வி, சோமசுந்தரி, துணைச்செயலாளர் சிவகாமி, நிர்வாகிகள் குற்றாலிங்கம், சுப்பிரமணி, கணேஷ், விக்ணேஷ், இசக்கிராஜா, உள்ப...

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார்

 ஷ்யாம் நியூஸ் 05.09.2022 தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார்   தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 151வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்தார். விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்;, ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், கஸ்தூரிதங்கம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், சின்னத்துரை, நலம் ராஜேந்திரன், ஜேசையா, பகுதி செயலாளர்கள் ஜெயக்க...

திமுகவின் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்

 திமுகவின் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார் அனிதா ராதாகிருஷ்ணன் . இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பகுதியில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா Rராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம் தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அனஸ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தூத்துக்குடி கிழக்கு A.M.ஸ்டாலின் தூத்துக்குடி மத்திய சண்முக நாராயணன் கருங்குளம் கிழக்கு கொம்பையா கருங்குளம் தெற்கு இசக்கிபாண்டியன் திருவைகுண்டம் மத்திய ராமமூர்த்தி திருவைகுண்டம் மேற்கு லெட்சுமணன் சாத்தான் குளம் மத்திய காலேப் ஆபிரகாம் அன்னை இந்திரா நகர் பகுதி அலெக்ஸ் ஸ்பிக் நகர் பகுதி தங்கராஜ் ஏரல் முகம்மது ஃப்கவி சாயர்புரம் சத்தியவிஜய் மற்றும் ஒன்றிய, பகுதி,நகர, பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மற்றும் கிளைகழ...

மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

 ஷ்யாம் நியூஸ் 03.09.2022 மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் இந்திராசக்தி விநாயகர் கோவில் 32ம் ஆண்டு சதூர்த்தி விழாவையொட்டி டேவிஸ்புரம் மெயின் ரோட்டில் 30 ஜோடிகள் கலந்து கொண்ட பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியை எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாநகராட்சி குப்பை கிடங்கு வரை சென்று திரும்பிய 30 ஜோடிகளில் வெற்றி பெற்ற புதூர் பாண்டியாபுரம் ஜோடி முதல்பரிசும், அரசடி ஜோடி இரண்டாம் பரிசும் பெற்றது. மேலும் 3 ஜோடிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி தர்மலி;ங்கம், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிளைச்செயலாளர் பொன்னுச்சாமி, இந்திராநகர் பகுதி இளைஞர் அணி தலைவர் பழனிமுத்துமாடசாமி, ஊர் நிர்...

மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

 ஷ்யாம் நியூஸ் 02.09.2022 மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.   தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுசீலா தேவி முன்னிலை வகித்தார். நம்ம ஊரு சூப்பர் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்தல் பிளாஸ்டிக் நெகிழிகள் உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு தூய்மை பாரத இயக்க மாவட்ட பயிற்சியாளர்கள் அங்காளஈஸ்வரி, ஆரோக்கிய மேரி, வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, தூய்மை பாரத இயக்க வட்டார ஓருங்கிணைப்பாளர் வக்கீல் சிவசுப்பிரமணியன், ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு குப்பை சார்ந்த பொருட்களை மூன்று வகையான குப்பை பாக்ஸ் வைக்கப்பட்டு மாணவ மாணவிகளிடம் எந்த கழிவுபொருட்களை மக்கும் குப்பை மக்காத குப்பை உபயோகப்படுத்தப்படாத நெகிழிகள் ஆகியவற...