திமுக வேட்பாளர்கள் கந்தசாமி, கனகராஜ், ஆகியோரை அறிமுகப்படுத்தி வாக்குகள் சேசகரித்தார் அமைச்சர் கீதாஜீவன்.
ஷ்யாம் நீயூஸ்
13.02.2022
திமுக வேட்பாளர்கள் கந்தசாமி, கனகராஜ், ஆகியோரை அறிமுகப்படுத்தி வாக்குகள் சேசகரித்தார் அமைச்சர் கீதாஜீவன்.
நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கந்தசாமி, கனகராஜ், ஆகியோரை அறிமுகப்படுத்தி தெருமுனை பிரச்சாரத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகள் ஏராளம் உள்ளன. மக்கள் நலன் தான் நமக்கு முக்கியம் என்று 20 மணிநேரம் தினமும் உழைக்கக்கூடிய முதல்வரை நாம் பெற்றுள்ளோம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் முதல் மாநிலம். என்ற பெருமையோடு பணியாற்றி வரும் முதல்வருக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் மாநகராட்சி பகுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 60 வார்டுகளிலும் நாம் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் ஜாதி மதம் பாராமல் உழைக்கும் கட்சி திமுக அதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு தந்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி துணைச்செயலாளர் பாலு, மாநகர மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.