ஷ்யாம் நீயூஸ்
17.02.2022
தூத்துக்குடி 32வது வார்டு திமுக வேட்பாளர் கந்தசாமி வீதி வீதியாக பிரச்சாரம்
தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் கந்தசாமி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், மாநில மகளிh அணி செயலாளரும் மாநிலங்களவை துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி, ஆசியுடன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றம் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் வழிகாட்டுதலின் படி
போட்டியிடும் திமுக வேட்பாளர் கந்தசாமி வார்டுக்குட்பட்ட டிஎம்பி காலணி அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களிடம் திமுக ஆட்சியின் சாதனைகளையும் அமைச்சர் கீதாஜீவன் செய்த பணிகளையும் எடுத்துக்கூறி மழைகாலங்களில் ஏற்பட்ட பாதிப்பின் போது செய்த வேலைகளையும் கருத்தில் கொண்டு தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இப்பகுதிக்கு முழுமையாக கிடைப்பதற்கு என்னாலும் உழைப்பேன் மாநகராட்சி நிர்வாகம் நல்ல முறையில் நடைபெற்று அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி கால்வாய் வசதி மின்விளக்கு வசதி என அனைத்து அடிப்படை பணிகளையும் செய்து கொடுப்பேன் அரசின் சார்பில் திருமண உதவி முதியோர் உதவி என அனைத்து திட்டங்களையும் நம் பகுதிக்கு முழுமையாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வருவேன் வரும் உள்ளாட்சி தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
பிரச்சாரத்தின் போது மாவட்ட மகளிர் அணி செயலாளர் கஸ்தூரிதங்கம், மாநகர மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அருணாதேவி, மகளிர் தொண்டரணி பார்வதி, போல்பேட்டை பகுதி துணைசெயலாளர் ரேவதி, மகளிர் அணி கவிதா, சுகிர்தா, ஜெயராணி, அண்ணாநகர் பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் ராமசந்திரன், வார்டு நிர்வாகிகள் தாமஸ், ஆல்வின், இளங்கோ, தளவாய்சாமி, எட்வர்ட், ராஜா, மருத்துவ அணி துணைச்செயலாளர் மாரிமுத்து, சேகர், ஜான்சன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.