ஷ்யாம் நீயூஸ்
11.02.2022
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் நடக்கவிருந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பெரியநாயகிபுரம் கிராம மக்களுக்குச் சொந்தமான சுடலைமாடசுவாமி கோவில் நிலப்பிரச்சனை காரணமாக வருவாய் துறை அதிகாரிகளை எதிர்த்து கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு கிராமத்தின் மையப்பகுதியில் போராட்டம் நடத்தினர் இதனை அறிந்த தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையம் ஆய்வாளர் ரமேஷ் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்து போராட்டத்தில் இருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மக்களின் கோரிக்கையை மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ரூரல் துணைக் கண்காணிப்பாளர் சம்பத், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி மறு விசாரணை செய்வதற்கான ஆணையை வருவாய்த் துறையிடம் பெற்றுக் கொடுத்தனர் இதனால் கிராம மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்த தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ரூரல் துணைக் கண்காணிப்பாளர் சம்பத், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர் மற்றும் வரும் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கையை தெரிவிப்போம் என்றும் தெரிவித்தனர் .