தூத்துக்குடி அருகே கொட்டும் பணியில் இரவு முழுக்க போராட்டத்தில் இருந்த கிராம மக்கள்!கண்டுக்காமல் இருந்த வருவாய்துறை அதிகாரிகள்.
ஷ்யாம் நீயூஸ்
10.02.2022
தூத்துக்குடி அருகே கொட்டும் பணியில் இரவு முழுக்க போராட்டத்தில் இருந்த கிராம மக்கள்!கண்டுக்காமல் இருந்த வருவாய்துறை அதிகாரிகள்!
தூத்துக்குடி அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள கிராமம் பெரியநாயகிபுரம்.இந்த கிராம மக்கள் திடிரென ஊர் மத்தியில் உள்ள சந்தணமாரியம்மன் கோவில் முன்பு போராட்டத்தில் இறங்கினர்.இது குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டபோது.பெரியநாயகிபுரத்து கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடலைமாடசுவாமி கோவில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் பாளை பிரதான சாலை அருகில் உள்ளது.இந்த கோவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர்மக்கள் வரி செலுத்தி கோவில் கொடை கொடுத்து வருதாகவும் தற்போது கோவில் இருக்கும் இடத்தை சொந்தம் கொண்டாடி போலி ஆவணம் கொடுத்து சாம் தேவதாசன் என்கின்ற நபர் அபகரிக்க முயற்ச்சிப்பதாகவும் அதற்க்கு தூத்துக்குடி தாசில்தார் ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.இந்த கோவில் திருவிழா காலம் காலமாக நடந்துவருவது சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தெரியும் என்றும் ஓய்வு பெற்ற கோரம்பள்ளம் 1 தலையாரி பணத்திற்காக மேற்படி நபருடன் சேர்ந்து போலி ஆவணம் தயார் செய்ய உதவி செய்துள்ளார் என்றும் இன்றும் தான் ஓய்வு பெறவில்லை பணியில் இருப்பதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் மற்றும் அரசு அதிகாரிளுக்கு தவறான தகவலை கொடுத்து வந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினர்.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் யாரும் வராததால் பேச்சுவர்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை . இரவு முழுக்க கொட்டும் பணியில் மக்கள் போராட்டத்தில் இருந்தனர்.அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடகூடாது என்பதற்க்காக புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலமையில் காவலர்கள் இரவு முழுக்க கொட்டும் பணியிலும் கொசு கடியை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.