தேமுதிக அதிமுக அமமுக ரஜினி மன்றத்தை சேர்ந்த 50 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
ஷ்யாம் நீயூஸ்
14.02.2022
தேமுதிக அதிமுக அமமுக ரஜினி மன்றத்தை சேர்ந்த 50 பேர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த தேமுதிக மாவட்ட மாணவரணி செயலாளர் ஷேக்உமர், ஜவஹர், சுந்தர், ராஜ் அதிமுகவை சேர்ந்த ரவிக்குமார், முத்துச்செல்வம், நாகராஜர், தீபக், அமமுகவை சேர்ந்த அன்னராஜன், அஸ்வின், சரவணன், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த கணேசன், சுந்தர், பிரபா, பார்த்திபன் உள்ளிட்ட 50 பேர் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களை கட்சி பணியை நல்ல முறையில் தங்களது பகுதியில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், மாநகர வக்கீல் அணி செயலாளர் ராஜேந்திரன், மாநகர பொறியாளர் அணி துணைச்செயலாளர் உலகநாதன், வட்டச்செயலாளர் முக்கையா, பகுதி செயலாளர் ரவீந்திரன், பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.