தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டு உறுப்பினருக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் வாக்குகள் சேகரித்தார்
ஷ்யாம் நீயூஸ்
10.02.2022
தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டு உறுப்பினருக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் வாக்குகள் சேகரித்தார்
மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நாகேஷ்வரிக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவருமான வே. காசிவிஸ்வநாதன் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்த சாதனைகளை சொல்லி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்.இந்நிகழ்ச்சியில் முன்னால் மேயர் கஸ்தூரி தங்கம் , மாநில கழக பேச்சாளர்கள் சரத்பாலா ,இருதயராஜ் ,தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கண்ணன் ,வட்ட செயலாளர் வழக்கறிஞர் சதிஷ் குமார் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோபால்,மாவட்ட பிரதிநிதி தளவை ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ,ஒன்றிய ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் மணிராஜ்,முத்துராஜ்கூட்டணி கட்சி நிர்வாகிகள் 4வது வார்டு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்