ஷ்யாம் நீயூஸ்
02.02.2022
தூத்துக்குடி வந்த சுதந்திர போராட்ட வீரர்களின் குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தை கண்டுகளிக்கும் மாணவர்கள்.

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி.போக்குவரத்துப் பூங்கா முன்பு குடியரசு தினவழாவில் பங்குபெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அணிவகுப்பு வாகனங்களில் ஒன்று பொது மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று வந்த அலங்கார வாகனத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமைச்சர் கீதா ஜீவன். கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில் அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி உள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களுடன் வந்து சுதந்திர போராட்ட வீரர்களை தெரிந்து கொள்ளும் வகையில் பார்வையிட்டு வருகின்றனர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை எடுத்து கூறிவருகின்றனர். மற்றும் மாணவர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுக்க ஆசைப்பட்டதால் தூத்துக்குடி செய்தி துறை சார்பாக மாணவர்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொடுத்து வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் தங்களை வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.