முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும் கனிமொழி எம்.பி பேச்சு!.
ஷ்யாம் நீயூஸ்
08.02.2022
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும் கனிமொழி எம்.பி பேசினார்.
தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ., ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பின் கனிமொழி எம்.பி பேசுகையில், இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். காரணம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறுவதால் நல்லாட்சிக்கு சான்று அளிக்கும் தேர்தலாக உள்ளது. தூத்துக்குடி மாநகரில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் துவக்கி வைக்க முதலமைச்சர் விரைவில் வர உள்ளார். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தேர்தல் களத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாய்ப்பு கிடைக்காதவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி திமுக வேட்பாளர்கள் உள்பட கூட்டணிக்கட்சியை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் 60 வார்டுகளிலும் வெற்றி பெற்று முதல்வரின் சாதனைக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். வேட்பாளர்கள் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ராஜ்மோகன் செல்வின், வக்கீல் பாலகுருசாமி, நாகேஸ்வரி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், ஜெயசீலி, நிர்மல்ராஜ், பவானி, மார்ஷன், சந்தனமாரி, தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, ரவீந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், ஜான், சோமசுந்தரி, ஜான்சிராணி, மகேஸ்வரி, மெட்டில்டா, மரியகீதா, சரண்யா, முத்துமாரி, கலைச்செல்வி, அதிர்ஷ்டமணி, கனகராஜ், கந்தசாமி, பொன்னப்பன், விஜயலட்சுமி, ரூபவள்ளி, சுரேஷ்குமார், ரிட்டா, பேபி ஏஞ்சல், அன்னலெட்சுமி, ராமகிருஷணன், ஜெனிட்டா, ரெக்ஸிலின் சூசை அந்தோணி, வைதேகி, சரவணக்குமார், முத்துராஜ், முத்துவேல், விஜயகுமார், ரங்கசாமி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன். பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன். மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், ராஜ்குமார். ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், ஜெயக்கொடி. ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ். தொண்டரணி செயலாளர் வீரபாகு. மாணவரணி துணை செயலாளர் பால்மாரி. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.