ஷ்யாம் நீயூஸ்
22.02.2022
தூத்துக்குடி மாநகராட்சியை கைப்பற்றியது. திமுக மேயர் ஆகிறார் ஜெகன் பெரியசாமி !.
.தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அதன் முடிவுகள் 22. 02. 2022 இன்று தூத்துக்குடி வ உ சி பொறியியல் கல்லூரியில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 60 வார்டுகளில் திமுக கூட்டணி 50 வார்டுகளில் அமோக வெற்றி பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக 6 இடங்களை கைப்பற்றியது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களை கைப்பற்றினர் .அதிக இடங்களை கைப்பற்றிய திமுக மேயராக முன்னால் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி மகனும் சமூக நலத்துறை பெண்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் கீதாஜீவன் தம்பியும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி சீர்மிகு மாநகராட்சியின் உறுப்பினரகளால் தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது மேயராக பதவி ஏற்க உள்ளார். ஐம்பது வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்திலும் 6வார்டுகளில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இரண்டு வார்டுகளில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் தோல்வியை தழுவியது. 20வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி எம் பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவனிடம் ஆசிபெற்றார்.