முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுயேட்சைகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரத்தில் பேசினார்.

 ஷ்யாம் நீயூஸ்

16.02.2022

சுயேட்சைகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரத்தில் பேசினார்.

     தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் ரெக்ஸின், ரிக்டா, மும்தாஜ், கலைச்செல்வி, சுரேஷ்குமார், ராமுத்தம்மாள், சரண்யா, ஆகியோரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் சுயேட்சை வேட்பாளர்களை நம்பாதீர்கள் அவர்களுக்கு வாக்களித்து வாக்கை வீணடித்துவிடாதீர்கள் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் கனிமொழி எம்.பி, மற்றும் என்னோடு இணைந்து பணியாற்றி தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் உங்கள் பகுதிக்கு கொண்டு வந்து சேர்ப்பார் மாநகராட்சி மேயரிடமும் கூறி உங்கள் பகுதியில் உள்ள குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் அதற்கு நானும் கனிமொழி எம்.பியும் துணையாக இருந்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் உங்கள் பகுதிக்கு கொண்டு வந்து சேர்ப்போம். கடந்த காலத்தில் கொரோனா மற்றும மழைக்காலங்களில் எல்லா பகுதிகளிலும் உழைத்தவர்கள்தான் வேட்பாளர்களாக உள்ளனர். கடந்த 5 வருடமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்து அதிமுக ஓட்டு கேட்பதற்கு வெட்கம் இல்லயா. மக்களுக்கான பணிகளை செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை அறிவித்து உங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வழிவகை செய்துள்ளார் மாநகரில் மின்விளக்கு புதிதாக அமைப்பதற்கு 4 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7.5 விழுக்காடு மூலம் தமிழில் படிப்போர் அனைவருக்கும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அரசின் தீவிர முயற்சியால் தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

       பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், திமுக மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மதிமுக மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், திமுக பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா, அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, வட்டச்செயலாளர்கள் டென்சிங், மீனாட்சி சுந்தரம், கங்காராஜேஷ், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், அன்டன்பொன்சேகா, சக்திவேல், ராஜ்குமார், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், இலக்கிய அணி துணைச்செயலாளர் ஆவுடையப்பன்,  மதிமுக அவைத்தலைவர் தொம்மை இலக்கிய அணி நிர்வாகிகள் மகாராஜன், விநாயகமூர்த்தி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வார்த்தக அணி தலைவர் வக்கீல் டேவிட் பிரபாகரன், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, பகுதி இளைஞர் அணி செயலாளர் சூர்யா, நிர்வாகிகள் கீதா செல்வமாரியப்பன், நாகூர், தினகரன், அப்பர்ஜான், சிபிஎம் கிளைச்செயலாளர் அழுகுபாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், கந்தசாமி, காங்கிரஸ் மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, மதிமுக வடக்கு மாவட்ட துணைச்செயலாளர்கள் வீரபாண்டி செல்லச்சாமி, ஒன்றிய செயலாளர் சரவணன், தொழிற்சங்க செயலாளர் அனல்செல்வராஜ், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...