பத்து ஆண்டுகளாக மக்களின் குறைகளை தீர்க்காத அ தி மு க வுக்கு பாடம் புகுட்ட வேண்டும் தூத்துக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது தி மு க வேட்பாளர் ஜெகன் பெரியசாமி !
ஷ்யாம் நீயூஸ்
13.02.2022
பத்து ஆண்டுகளாக மக்களின் குறைகளை தீர்க்காத அதிமுகவிற்க்கு பாடம் புகுட்ட வேண்டும் என்று கூறி தூத்துக்குடி மாநகராட்சி 20 வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார்.
நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதி 20வது வார்டு திமுககூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி கோமதிபாய் காலணி, பழைய ஸ்டேட்பேங்க் காலணி, உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தே சென்று பொதுமக்கள் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.
பொதுமக்களிடம் கூறுகையில்,கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவினர் மக்களின் குறைகளை தீர்க்கவில்லை அவர்களுக்கு மிகச்சரியான பாடம் புகட்ட வேண்டும். பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் தீர்ப்பதற்கும் அரசின் திட்டங்கள் முறையாக உங்களுக்கு கிடைத்திடவும் என்னை தேர்ந்தெடுக்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் வந்து எல்லா நன்மைகளையும் உங்களுக்கு கிடைப்பதற்கு முழுமையாக என்னை அற்பணித்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலோடு பணியாற்றுவேன் என்றார்.