முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக அரசுப்பணியில் புவிஇயற்பியல் படிப்புக்கான அரசு பணியிடங்கள் உருவாக்க வேண்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பார்ப்பு சென்னை: தமிழகத்தில் பல

 

ஷ்யாம் நீயூஸ்

21.02.2022

தமிழக அரசுப்பணியில் புவிஇயற்பியல் படிப்புக்கான அரசு பணியிடங்கள் உருவாக்க வேண்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பார்ப்பு

தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்து மறைக்கப்பட்ட  பல வரலாற்று சுவடுகள் எதிர்கால மாணவ மாணவியர்களுக்கு நாட்டுமக்களுக்கு தெரிய வேண்டும் என்று மத்திய அரசின் தொல்லியல்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதே போல் தமிழக அரசும் பல மாவட்டங்களில் உள்ள வரலாற்றில் சின்னங்கள் மற்றும் பூமிக்கடியில் உள்ள பழமைவாய்ந்த தொல்லியல் துறைக்கு சம்பந்தப்பட்டவை ஆராய்ந்து அதற்கென நிதியும் ஓதுக்கப்பட்டு அத்துறையில் அமைச்சராக தங்கம் தென்னரசு பணியாற்றி வருகிறார். திமுக தலைவர் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் 7 அம்ச திட்டங்களை அறிவித்து இதை 10ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்துவோம் என அறிவித்திருந்தார். அதன்பின் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் நடைபெற்ற அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தின் போது எல்லாத்துறைகளிலும் தமிழக அரசு வளர்ச்சியடையவேண்டும். அதற்கு முன் மாதிரியாக அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும். புதிய தொழில்கொள்கை உருவாக்கி தொழிற்சாலைகள் தொழில்வளங்கள் பெருக வேண்டும். வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு பல நிறுவனங்களை அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு தடையின்றி அதிகாரிகளும் அதற்குரிய அமைச்சர்களும் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது மட்டுமின்றி படித்த பட்டதாரி மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பு மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும் என்று உத்திரவிட்டிருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் தமிழர்களுக்கு தான் இனி வாய்ப்பு என்று ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் எவ்வளவு  தண்ணீர் ஊற்றினாலும் நிரம்பாத நெல்லை அதிசய கிணறு மர்மத்தை ஐ.ஐ.டி கூறுவதற்கு முன்பாகவே மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள்

            நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆயன்குளம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையில் பல ஆயிரம் கனஅடி அளவு நீர் உள் வாங்கியும் வற்றாத கிணறு ஒன்று இருந்தது. இக்காரணத்தால் மக்கள் இதனை அதிசய கிணறு என்று அழைத்தனர்.

    எதனால் இது இவ்வளவு கனஅடி நீரை உள் வாங்குகிறது என விடை கண்டறிய முடியாமல் அனைவரும் திகைத்தனர். மேலும் இதனை அந்த நேரத்தில் தற்போது தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அப்போதைய திருநெல்வேலி கலெக்டரும் நேரில் ஆராய்ந்தனர். மேலும் அந்த மர்ம முடிச்சை முழுமையாக கண்டறிய கலெக்டர் சென்னை ஐ.ஐ.டி குழுவினர் வந்து ஆராய வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

     இதன் தொடர்ச்சியாக சென்னை ஐ.ஐ.டி பேராசியர் தலைமையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பிளவுபட்ட சுண்ணாம்பு படுகையினால் இக்கிணறு அதிகப்படியான நீரை உள்வாங்கி கொள்வதாக கருத்துரை ஒன்றை கடந்த பதினெட்டாம் தேதி ஐ.ஐ.டி சென்னை வெளியிட்டது.

     ஆனால் இக்கருத்தை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக புவி இயற்பியல் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டறிந்து ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

     மேலும் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டும் வருகின்றனர். ஐ.ஐ.டி குழு கண்டு பிடிப்பதற்கு முன்னரே மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் இம்மர்மத்தை கண்டறிந்தது அனைத்து தரப்பினரையும் மிக ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இது போன்ற பல புவிசார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசுப்பணியில் இந்த புவிஇயற்பியல் படிப்புக்கான அரசு பணியிடங்கள் வழங்கி பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நல்ல முறையில் பணியாற்றும் மாநிலமாக உள்ள தமிழக அரசு மேலும் பல பெருமைகளை பெறுவதற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...