தூத்துக்குடியில் நகர் மன்றத் தேர்தல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிரச்சாரம்!
ஷ்யாம் நீயூஸ்
10.02.2022
தூத்துக்குடியில் நகர் மன்றத் தேர்தல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிரச்சாரம்!
வரும் 19ஆம் தேதி நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை செய்வதற்கு சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தூத்துக்குடி வந்துள்ளார் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வருகின்ற நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க வந்துள்ளோம் திமுக கூட்டணி வெற்றி பெற 100% பாடுபடுவோம் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை இதனால் அதிகாரிகள் அந்த பணியை மேற்கொண்டனர் இதனால் பொதுமக்களுக்கு செல்லவேண்டிய நலத்திட்ட பணிகள் சரிவர செயல்படவில்லை தற்போது முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸடாலின் நல்லாட்சி செய்து வருகிறார் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர் அதனால் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் 100% திமுக கூட்டணி வெற்றி பெறும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் நமது முதல்வர் மீண்டும் அந்த மனுவை சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் நீட் விழக்கு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி உள்ளது வரலாற்று மிக்க செயலாகும் திமுக தோழமை கட்சிகள் வெற்றிபெற சமத்துவ மக்கள் கழகம் முழு ஆதரவுடன் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மாநில பொருளாளர் கண்ணன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர், கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, அவைத்தலைவர் கண்டி வேலர், பொருலாளர் அருண் சுரேஷ்குமார், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் ,மீனவர் அணி செயலாளர் விக்ரம், இளைஞரணி செயலாளர் டேனியல், மாநகர செயலாளர் உதயசூரியன் ஆகியோர் உடன் இருந்தனர்.