ஷ்யாம் நீயூஸ்
10.02.2022
நீட் விலக்கு விவகாரம் தமிழக ஆளுநர் பதவி விலகுகிறாரா?
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கே சிக்கலை ஏற்படுத்தி ஒட்டுமொத்த இமேஜை டேமேஜ் செய்துள்ளார் ஆளுனர் ஆர். என் ரவி
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையாக ஒப்புதல் பெற நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது ஐந்து மாதங்கள் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் அதை திருப்பி அனுப்பி இருந்த நிலையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை மீண்டும் ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது இச்சம்பவம் ஆளுநருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தமிழக அரசை மிரட்டி கட்டுக்குள் கொண்டு வந்து சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக மாற்ற வேண்டும் என்கின்ற பாஜக பிளானையும் ஆளுநர் ஆர்.என்.ரவி நீர்த்து போக செய்துள்ளார்.இனியும் ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிக்க நேர்ந்தால் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநரை நீக்கினாலோ அல்லது வேறு இடத்துக்கு இடமாற்றம் அளித்தாலும் கூட மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும்
எனவே ஆளுநர் தாமாக முன் வந்து பதவி விலகினால் மட்டுமே பிரச்சனைக்கு தற்காலிகமாக உடனடி தீர்வு காண முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மீண்டும் முதலில் இருந்து இந்த பிரச்சனையை கிடப்பில் போடலாம் என்பது பாஜக பிளான்.